Home /News /national /

தொகுதிப்பங்கீட்டை முடித்த அகிலேஷ்- மாயாவதி...! பின்னாடியே வந்த சிபிஐ

தொகுதிப்பங்கீட்டை முடித்த அகிலேஷ்- மாயாவதி...! பின்னாடியே வந்த சிபிஐ

அகிலேஷ் யாதவ் - மாயாவதி (Image: PTI)

அகிலேஷ் யாதவ் - மாயாவதி (Image: PTI)

தோல்வி பயத்தால் சிபிஐ அமைப்பை வைத்து மத்திய அரசு மிரட்டல் விடுவதாக சமாஜ்வாதி கட்சியிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட்டு அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அமைத்துள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் ஆட்சியில் நடந்த கனிமக்கொள்ளை வழக்கில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றது. மொத்தமாக 80 தொகுதிகள் இருக்கும் அந்த மாநிலத்தில் கடந்த முறை பாஜக 70-க்கும் மேலான இடங்களை கைப்பற்றியது. அதனை அடுத்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியையும் கைப்பற்றியது.

பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அமைக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனை உறுதி செய்யும் வகையில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் மாபெரும் வெற்றி பெறலாம் என்று கருத்து கணிப்புகளும் கூறின.

காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தால் தொகுதி குறையும் என்பதால், காங்கிரஸை கைகழுவி விட்டு அகிலேஷ் யாதவ் - மாயவாதி கூட்டணி அமைத்தனர்.
இரு கட்சிகளும் தலா 37 இடங்களில் போட்டியிடுவது என்றும் ஆர்எல்டி கட்சிக்கு 3 இடங்கள் அளிப்பது என்றும் தொகுதிப்பங்கீடு முடிந்தது. எனினும், தேர்தல் நேரத்தில் இந்தக் கணக்கு மாறலாம்.

இந்நிலையில், தொகுதிப்பங்கீடு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்திலேயே அம்மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி வீடுகளில் சிபிஐ ரெய்டு நடந்துள்ளது. கனிமக்கொள்ளை தொடர்பான வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரகலா உள்ளிட்ட 11 பேர் மீது சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்தது. 2012-ல் அகிலேஷ் முதல்வராக இருந்தபோது நடந்த கனிமக்கொள்ளையை விசாரித்து வரும் சிபிஐ அப்போது உயர் பதவி வகித்தவர்கள் மீது இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது.

முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலத்தில் சுரங்கத்துறை அகிலேஷிடம் இருந்தது என்பதால், அவரையும் சிபிஐ வளைக்க திட்டமிட்டுள்ளது. தோல்வி பயத்தால் சிபிஐ அமைப்பை வைத்து மத்திய அரசு மிரட்டல் விடுவதாக சமாஜ்வாதி கட்சியிலிருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.

Also See...

Published by:Sankar
First published:

Tags: Bahujan Samaj Party, BJP, Samajwadi party

அடுத்த செய்தி