• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வுக்கும் கொரோனா பாதிப்பு

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வுக்கும் கொரோனா பாதிப்பு

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவத்தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக ஒரு நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.84 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுவருகின்றன. இருப்பினும், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

    சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதேபோல, தமிழ், மலையாளம், தெலுகு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் நிவேதா தாமஸும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, சுந்தர் சி, பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 7,000-த்தை எட்டியுள்ளது. நேற்று, தி.மு.க எம்.பியும் பொருளாளருமான டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்வுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: