• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உத்தரப் பிரதேச தேர்தல்: அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அதிரடி தகவல்!

உத்தரப் பிரதேச தேர்தல்: அகிலேஷ் யாதவ் வெளியிட்ட அதிரடி தகவல்!

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில், அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD கட்சியுடன் கூட்டணியையும் அக்கட்சி இறுதி செய்துள்ளது.

  • Share this:
    உத்தர பிரதேசம் மாநில சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. 430 தொகுதிகளை கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு பல முனை போட்டி நிலவிவருகிறது. ஆளும் பாஜக கூட்டணி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி போன்றவை தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    முன்னாள் ஆளுங்கட்சியான சமாஜ்வாதி கட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ராஷ்ட்ரிய லோக் தளம்  கட்சியுடன் சமாஜ்வாதி கட்சியின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிடிஐ ஊடகத்துக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், RLD உடனான எங்கள் கூட்டணி இறுதியானது. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட உள்ளது என்று கூறினார்.

    மேலும்,  அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ் தற்போது, அசம்கார் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். முதலமைச்சர் வேட்பாளராக பார்க்கப்படும் அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது, சமாஜ்வாதி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க பாஜக முனைப்புகாட்டி வரும் நிலையில்,எப்பாடியாவது ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த முறை பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை காங்கிரஸ் சந்திக்கவுள்ளது.

    இதையும் படிங்க: இலவச காஸ் சிலிண்டர், பேருந்தில் இலவச பயணம்.. வாக்குறுதிகளை அள்ளி வீசும் காங்கிரஸ்!


    பெண்களுக்கு மூன்று எல்பிஜி சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், மேலும் மாநில அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.  12ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் கல்லூரி படிப்பை முடிந்த பெண்களுக்கு இ.ஸ்கூட்டர் வழங்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை பிரியங்கா காந்தி அளித்துள்ளார்.

    மேலும் படிக்க: லக்னோ மெட்ரோ ரயில்நிலையத்தில் குரங்குகளின் கட் அவுட்கள் - குரங்குகள் தொல்லையால் நிர்வாகம் எடுத்த முடிவு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: