Home /News /national /

குடும்ப தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி: சமாஜ்வாதி கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு!

குடும்ப தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி: சமாஜ்வாதி கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு!

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

ஆளும் பாஜகவை எதிர்த்து களம் காணும் அகிலேஷ், சிறு சிறு கட்சிகளுடம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

    அடுத்த மாதம் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில், முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கர்ஹால் தொகுதியிலிருந்து போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதி அமைந்துள்ள மைன்புரி மாவட்டம், முலாயம் சிங்கின் கோட்டையாக பார்க்கப்படுகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கின்றன. பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது, மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி என தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாதிக்கும் நேரடியாக போட்டி இருப்பதாகக் கூறப்படுகிறது.

    முன்னதாக தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என்றும், ஒவ்வொரு தொகுதியையுமே தான் போட்டியிடும் தொகுதியாகக் கருதி கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறியிருந்தார். ஆனால், கட்சிக்குள் அகிலேஷ் போட்டியிட வேண்டும் என்ற அழுத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தேர்தலில் போட்டியிடுவார் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    Also read:  ‘ஷிஃப்ட் முடிஞ்சு போச்சு, விமானத்தை ஓட்டமுடியாது..!’ அடம்பிடித்த விமானி - பயணிகள் கதறல்..

    சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக கருதப்படும் மெயின்புரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கர்ஹால் சட்டப்பேரவைத் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.

    கடந்த 1993ஆம் ஆண்டு முதல், ஒரு முறை தவிர்த்து, மற்ற எல்லா தேர்தல்களிலும் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளரே வெற்றிபெற்றுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், பாஜக வசம் சென்றது இந்த தொகுதி. தற்போது, இந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக சோபரன் யாதவ் உள்ளார்.

    முலாயம் சிங், ஐந்து முறை போட்டியிட்டு வென்ற மைன்புரி மக்களவை தொகுதியின் கீழ் கர்வால் சட்டப்பேரவை தொகுதி வருகிறது. இந்த தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ், வரலாறு காணாத வெற்றியை பெறுவார் என சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ் தெரிவித்துள்ளார்.

    கடந்த பல நாள்களாகவே, சட்டப்பேரவை தேர்தலில் அகிலேஷ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தன. ஆளும் பாஜகவை எதிர்த்து களம் காணும் அகிலேஷ், சிறு சிறு கட்சிகளுடம் கூட்டணி அமைத்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவது இதுவே முதல்முறை.

    கடந்த நவம்பர் மாதம், தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அகிலேஷ் அறிவித்தார். ஆனால், அனைத்து தரப்பினரிடமும் சேர்ந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு அகிலேஷ் போட்டியிடுவது குறித்த அறிவுப்பு வெளியாகும் என கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    பாஜகவின் கோட்டையான கோரக்பூர் தொகுதியிலிருந்து முதல்வர் யோகி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, அகிலேஷ் யாதவுக்கு அழுத்தம் எழுந்ததாகவும் இதன் காரணமாகவே அவர் தேர்தலில் போட்டியிடுகிறார் என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    Also read: பாகிஸ்தான் சிதைந்துவிடும், இம்ரான் கான் ஐஎஸ்ஐ கைப்பாவை - தாலிபான்கள் கடும் தாக்கு
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Akilesh yadav, Uttar pradesh

    அடுத்த செய்தி