Home /News /national /

தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தைக் காண ஒரு தியேட்டரையே புக் செய்த அகிலேஷ் யாதவ்!

தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தைக் காண ஒரு தியேட்டரையே புக் செய்த அகிலேஷ் யாதவ்!

தீபிகா படுகோன்

தீபிகா படுகோன்

Chhapaak Movie |

  • News18
  • Last Updated :
    சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் நடிகை தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தைக் காண ஒரு தியேட்டரையே முன்பதிவு செய்துள்ளார்.

    லக்னோவில் உள்ள ஒரு பிரபலமான தியேட்டர் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அகிலேஷ் யாதவ் தனது கட்சித் தொண்டர்களுடன் இணைந்து இத்திரைப்படத்தைக் காண உள்ளார். சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தீபிகா தெரிவித்தார்.

    இதனால், ட்விட்டரில் பலரும் தீபிகா படுகோனுக்கு ஒருபக்கம் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். ஆனாலும், பாஜக ஆதரவாளர்கள் பலர் தீபிகாவின் ’சப்பக்’ திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூடுதலாக, முன்பதிவு செய்திருந்த திரைப்பட டிக்கெட்டுகளையும் கிழித்து எறிவது போன்றும் வீடியோ வெளியிட்டனர்.

    இத்தகைய சூழலில் நடிகை தீபிகாவின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது சப்பக் திரைப்படத்துக்கு பேராதரவு தர ஒரு தியேட்டரை முன்பதிவு செய்துள்ளார் அகிலேஷ் யாதவ். மேலும், தீபிகாவுக்கு ஆதரவாக மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் ’சப்பக்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளார்.

    மேலும் பார்க்க: 6 மாணவர்கள், ஆசிரியருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு... உடனடி நடவடிக்கையில் கேரள அரசு
    Published by:Rahini M
    First published:

    Tags: Akhilesh Yadav

    அடுத்த செய்தி