• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • முறிந்தது மெகா கூட்டணி: சட்டமன்ற இடைத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் தனித்து போட்டி

முறிந்தது மெகா கூட்டணி: சட்டமன்ற இடைத் தேர்தலில் மாயாவதி, அகிலேஷ் தனித்து போட்டி

மாயாவதி - அகிலேஷ்

மாயாவதி - அகிலேஷ்

  • Last Updated :
  • Share this:
உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவிக்க, அவரைத்தொடர்ந்து தனித்து போட்டி என சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்வும் அறிவித்துள்ளார். இதன்மூலம் மக்களவை தேர்தலையொட்டி உருவாக்கப்பட்ட மெகா கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருந்த சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பாஜகவை வீழ்த்துவதற்காக மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளிலும், சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் மட்டுமே வென்றன,

இந்நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்தார். மக்களவை தேர்தலில் யாதவ சமூக வாக்குகள் சமாஜ்வாதி கட்சிக்கு வந்து சேரவில்லை என்றும், அக்கட்சியின் வலுவான வேட்பாளர்களே தோல்வியடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் அகிலேஷ்யாதவ் மற்றும் டிம்பிள் ஆகியோர் தனக்கு மிகப்பெரிய மரியாதை அளித்ததாகவும் அவர் கூறினார்.

கூட்டணியில் ஏற்பட்ட பிரிவு நிரந்தரமானது அல்ல என்றும், எதிர்காலத்தில் அகிலேஷ்யாதவ் அரசியலில் வெற்றி பெற்றால் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள, சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ ஹரிஓம் யாதவ், தங்கள் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சென்றுள்ளதாவும், ஆனால் பகுஜன் சமாஜ் வாக்குகள் தங்களுக்கு விழவில்லை என்றும் கூறியுள்ளார்.

இடைத்தேர்தலில் கூட்டணி கிடையாது என்றால், சமாஜ்வாதி கட்சி அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். கூட்டணி உடைந்தது என்றால் கடுமையாக எதிர்வினையாற்றுவோம் என்றும், இடைத்தேர்தல் நடைபெறும் 11 தொகுதிகளிலும் சமாஜ்வாதி தனித்து போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் தங்கள் கூட்டணிக்கு வரும் பட்சத்தில், அதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவருமான ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: