Home /News /national /

பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை தோல்வி.. மம்தா பானர்ஜி கட்சியில் சேர முடியாது என மறுத்த அசாம் எம்.எல்.ஏ!

பிரசாந்த் கிஷோர் பேச்சுவார்த்தை தோல்வி.. மம்தா பானர்ஜி கட்சியில் சேர முடியாது என மறுத்த அசாம் எம்.எல்.ஏ!

Mamata banerjee - Prashant Kishor

Mamata banerjee - Prashant Kishor

திரிணாமுல் காங்கிரஸுடன் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் இந்த பேச்சின் போது இருந்தார். அவர்கள் என்னை திரிணாமுல் காங்கிரஸின் அசாம் தலைவராக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

மேலும் படிக்கவும் ...
அசாம் மாநிலத்தில் வளர்ந்து வரும் இளம் தலைவராக அறியப்படுபவர் அகில் கோகாய். அசாமின் சிப்சாகர் தொகுதி எம்.எல்.ஏவான இவர் ‘ரய்ஜோர் டோல்’ என்ற மாநிலக் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

அகில் கோகாயின் கட்சியை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் இணைக்க அவருக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். மேலும் திரிணாமுல் காங்கிரஸின் அசாம் தலைவராக அகில் கோகாய் செயல்படலாம் எனவும் கூறப்பட்டது. இதற்காக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான குழுவினரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், திரிணாமுல் காங்கிரஸில் சேர முடியாது என மறுத்திருக்கிறார் அகில் கோகாய்.

Also Read:  ‘11 நிமிடம் தான் பாலியல் வன்புணர்வு செய்தார்’: குற்றவாளிக்கு தண்டனையை குறைத்து ஷாக் கொடுத்த பெண் நீதிபதி!

இது தொடர்பாக அகில் கோகாய் தெரிவித்துள்ளதாவது, “திரிணாமுல் காங்கிரஸுடன் இதுவரை 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோரும் இந்த பேச்சின் போது இருந்தார். அவர்கள் என்னை திரிணாமுல் காங்கிரஸின் அசாம் தலைவராக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் எனது கட்சியினருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் திரிணாமுல் காங்கிராஸுடன் எங்கள் கட்சியை இணைக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். அசாமுக்கு அதன் சொந்த பிராந்திய உணர்வு உள்ளது மற்றும் இதை ஒரு பிராந்திய கட்சி தளத்திலிருந்து மட்டுமே நியாயப்படுத்த முடியும். தேசிய கட்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனது திட்டமாக இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாக்கும் மம்தா பானர்ஜியின் நிலைப்பாட்டை மதிக்கிறேன் என தெரிவித்த கோகாய், அரவிந்த் கெஜ்ரிவால் கூட கூட்டாட்சி அமைப்பைப் பற்றி அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை, ஆனால் இந்த விஷயத்தில் குரல் கொடுக்கும் ஒரே அரசியல்வாதி மம்தா பானர்ஜி மட்டுமே என்றார்.

Also Read: தலிபான்களின் அசுர முன்னேற்றம் – ஒரே வாரத்தில் 8வது ஆப்கன் நகரை கைப்பற்றி மிரட்டல்!

மம்தா பானர்ஜியை நான் ஆதரிக்கிறேன், 2024 தேர்தலுக்கு அவர் பிரதமராக முன்னிறுத்தப்பட்டால், நாங்கள் எங்கள் ஆதரவை அவருக்கு வழங்குவோம். கூட்டாட்சி நெருக்கடியில் உள்ளது, அனைத்து பிராந்திய கட்சிகளும் பாஜக-ஆர்எஸ்எஸ்-ஐ தோற்கடிக்க ஒன்றாக வர வேண்டும் என அகில் கோகாய் கூறினார்.

முன்னதாக, மம்தா பானர்ஜிக்கு ஆதரவு அளித்த அகில் கோகாய், நான் மம்தா பானர்ஜியை இந்தியாவின் அடுத்த பிரதமராக பார்க்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்தார். கடந்த வாரம் மேற்குவங்கம் சென்ற அகில், பிரசாந்த் கிஷோரையும், திரிணாமுல் தலைவர்களையும் சந்தித்து பேசிய போது பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற பொதுவான தளத்தை உருவாக்குவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில் அகிலை, காங்கிரஸாரும் சந்தித்து கூட்டணி குறித்து பேசியுள்ளனர்.. எதிர்வரும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் இணைய அகிலுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பத்ருதின் அஜ்மல் (AIUDF) அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கூட்டணியில் தன்னால் ஒருபோதும் இணைய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Published by:Arun
First published:

Tags: Assam, Politics, TMC

அடுத்த செய்தி