• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அக்பர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ் அதேவாலே

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அக்பர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ் அதேவாலே

மத்திய அமைச்சர் ராமதாஸ் அதேவாலே

மத்திய அமைச்சர் ராமதாஸ் அதேவாலே

  • News18
  • Last Updated :
  • Share this:
    எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் அதேவாலே தெரிவித்துள்ளார்.

    மத்திய வெளியுறவு இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். அக்பருக்கு கீழ் பணியாற்றியபோது, தங்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ், எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து திருப்திகரமான விளக்கத்தை அவர் வழங்க வேண்டும் அல்லது உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்.

    தீவிர குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமைச்சரின் நடத்தை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், நைஜீரியா பயணம் மேற்கொண்டிருந்த எம்.ஜே.அக்பர் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நேற்று காலை டெல்லி திரும்பினார். முன்னதாக, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியானது.

    ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்த எம்.ஜே.அக்பர், “வெளிநாட்டு பயணத்தில் இருந்ததால் இது தொடர்பாக உடனடியாக பதில் அளிக்க முடியவில்லை. என் மீதான எல்லா பாலியல் குற்றச்சாட்டுகளுமே பொய்யானவை. எனக்கு எதிராக புகாரளித்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறியுள்ளார்.

    இந்நிலையில், இந்த புகார் குறித்து மத்திய அமைச்சர் ராமதாஸ் அதேவாலே கூறுகையில், பெண்களை துன்புறுத்தும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நானா படேகர், எம்.ஜே.அக்பர் போன்று பிரபலமானவர்களாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்பர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: