அம்பானி குடும்பத்தில் அடுத்த கல்யாணம் ரெடி!

ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது

அம்பானி குடும்பத்தில் அடுத்த கல்யாணம் ரெடி!
ஆகாஷ் அம்பானி
  • News18
  • Last Updated: February 11, 2019, 8:51 PM IST
  • Share this:
அம்பானி குடும்பத்தினர் ஆகாஷ் அம்பானியின் கல்யாண பத்திரிகையை கோவிலில் வைத்து பூஜை செய்தனர். 

முகேஷ் அம்பானி, நீடா அம்பானி மற்றும் அவர்களுடைய மகன் ஆனந்த் அம்பானி ஆகியோர் மும்பையிலுள்ள சித்திவிநாயக் கோயிலுக்கு சென்று ஆகாஷ் அம்பானியின் கல்யாண பத்திரிகையை வைத்து பூஜை செய்தனர்.  ஆகாஷ் அம்பானி, ஷோல்கா மேதா ஆகியோரின் நிச்சயதார்த்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அவர்களுடைய திருமணம் வரும் மார்ச் மாதம்  நடைபெறவுள்ளது. பள்ளி காலத்தில் இருந்தே பழகி வந்த இருவரும் தற்போது திருமணம் செய்துகொள்ள இருக்கின்றனர். தொழிலதிபர் ரசல் மேத்தா மற்றும் மோனா மேத்தா ஆகியோரின் மகள் ஷோல்கா மேதா.
முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இஷா அம்பானிக்கும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே பிரமால் மகன் ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் நடைபெற்றது. நாடு முழுவதிலும் இருந்து திரை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தனர்.
First published: February 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்