Home /News /national /

டேக் ஆப் ஆகும் ஆகாசா ஏர் - ஆகஸ்ட் 7ல் முதல் விமான சேவை தொடக்கம்

டேக் ஆப் ஆகும் ஆகாசா ஏர் - ஆகஸ்ட் 7ல் முதல் விமான சேவை தொடக்கம்

முதல் சேவையை தொடங்கும் ஆகாசா ஏர் நிறுவனம்

முதல் சேவையை தொடங்கும் ஆகாசா ஏர் நிறுவனம்

Akasa Air - மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு இந்த முதல் சேவை செல்கிறது.

    இந்திய விமான போக்குவரத்து சேவையில் புதிய என்ட்ரி தருகிறது ஆகாசா ஏர் நிறுவனம். நாட்டின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளராக விளங்குபவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளார். பங்குச்சந்தை முதலீடு மூலம் பெரும் கோடீஸ்வரான இவர், ஆகாசா ஏர் விமான போக்குவரத்து சேவை நிறுவனத்தை வினய் துபே மற்றும் ஆதித்தயா கோஷ் ஆகியோருடன் இனைந்து நடத்துகிறார்.

    உலகின் முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்கி ஆகாசா ஏர் ஒப்பந்தம் போட்டுள்ளது. முதல் கட்டமாக 18 விமானங்களையும் மொத்தம் 72 விமானங்களையும் வாங்க ஆகாசா ஏர் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

    தொடர்ந்து ஆகாசா ஏர் நிறுவனம் தனது சேவையை தொடங்க விமான போக்குவரத்து ஆணையம் இந்த மாதம் 8ஆம் தேதி அனுமதி வழங்கியது.


    இந்நிலையில், ஆகாசா ஏர் தனது முதல் வர்த்தக விமான சேவையை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு இந்த முதல் சேவை செல்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் 28ஆம் தேதி தொடங்குவதாக ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பை - அகமதாபாத் விமானத்திற்கான கட்டண சேவை ரூ.3,948ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெங்களூரு- கொச்சி வழித்தடத்தில் வாராந்திர விமான சேவையை ஆகாசா ஏர் ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்குகிறது. முதல் கட்டமாக மும்பை, அகமதாபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களில் ஆகாசா ஏர் சேவை தொடங்கும் நிலையில், அதை மெல்ல படிப்படியாக மற்ற நகரங்களுக்கு விரிவாக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இதையும் படிங்க: 80ஐ தொட்ட அமெரிக்க டாலர் மதிப்பு; இதே நிலை தொடர்ந்தால் என்னவாகும்?

    இந்தியாவில் ஏர் இந்தியா, ஏர் ஏசியா, இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற பட்ஜெட் ரக விமானங்கள் சேவை வழங்கி வரும் நிலையில், தற்போது ஆகாசா ஏர்ரின் புது வருகையானது சந்தையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிறுவனத்தின் பங்குதாரரான வினய் தூபே தான் சிஇஓவாக தற்போது செயல்பட்டு வருகிறார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Flight, Flight travel

    அடுத்த செய்தி