Home /News /national /

விமான சேவைகளை அதிகரிக்க ஆகாசா ஏர் நிறுவனம் திட்டம் - வாரம் 250 விமானங்கள்.!

விமான சேவைகளை அதிகரிக்க ஆகாசா ஏர் நிறுவனம் திட்டம் - வாரம் 250 விமானங்கள்.!

ஆகாசா ஏர்

ஆகாசா ஏர்

Akasa Air | வாரம் ஒன்றுக்கு தலா 250 விமானங்களை இயக்க வேண்டும் என்ற இலக்கை அக்டோபர் மாதத்திற்குள் அடைய ஆகாசா ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இந்தியாவில் அண்மையில் தொடங்கப்பட்ட புதிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஆகாசா ஏர், உள்நாட்டில் 9 வழித்தடங்களில் விமானச் சேவையை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, வாரம் ஒன்றுக்கு தலா 250 விமானங்களை இயக்க வேண்டும் என்ற இலக்கை அக்டோபர் மாதத்திற்குள் அடைய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பங்குச் சந்தை முதலீட்டாளரும், மறைந்த தொழிலதிபருமான ராகேஷ் ஜுன்ஹேவாலா சார்பில் ஆகாசா ஏர் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. விமானப் போக்குவரத்து துறையில் உள்ள மூத்த தொழில் நிபுணரான வினய் துபே உடன் இணைந்து இந்த நிறுவனத்தை அவர் தொடங்கினார்.

இந்நிலையில், குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு கடந்த மாதம் 7 ஆம் தேதி இந்நிறுவனத்தின் சார்பில் முதலாவது விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை, கொச்சி மற்றும் பெங்களூரு போன்ற மாநகரங்களுக்கு சேவை நீட்டிக்கப்பட்டது.

தற்போது 6வது இடமாக டெல்லியை இணைக்க உள்ளோம் என்றும், இங்கிருந்து பெங்களூரு மற்றும் அஹமதாபாத் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படும் என்றும் ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவை அக்டோபர் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. டெல்லியில், விமானப் போக்குவரத்திற்கு நிலவும் போட்டியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



அஹமதாபாத் - பெங்களூரு இடையே அக்டோபர் 7ஆம் தேதி முதல் கூடுதலாக மற்றொரு விமானத்தை இயக்குவதற்கு ஆகாசா ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் இணை நிறுவனரும், முதன்மை வர்த்தக அதிகாரியுமான பிரவீண் ஐயர் கூறுகையில், “எங்கள் நிறுவனத்தில் 5ஆவது விமானத்தை போக்குவரத்து சேவையில் இணைக்க உள்ளோம்.

Also Read : விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பஞ்சாப் முதலமைச்சர்.. காரணம் என்ன.?

இதன் மூலமாக வாரம் ஒன்றுக்கு 250 விமானச் சேவைகளை அளிக்க வேண்டும் என்ற இலக்கை விரைவில் எட்டுவோம். டெல்லி மற்றும் பெங்களூரு இடையே விமானச் சேவையை தொடங்குவதோடு மட்டுமல்லாமல் பெங்களூரு மற்றும் அஹமதாபாத் இடையே கூடுதல் சேவை தொடங்கப்பட உள்ளது’’ என்று தெரிவித்தார்.



முன்னதாக, டெல்லியில் ஆகாசா நிறுவனத்தின் போக்குவரத்து சேவையை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், “டெல்லியில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த தேவைகளை பூர்த்தி செய்யவும், புதிய வழித்தடங்களில் சேவையை தொடங்கவும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார்.

Also Read : பள்ளி செல்லும் குழந்தைகளை தெரு நாய்களிடமிருந்து காக்க துப்பாக்கியுடன் வந்த தந்தை... பரபரப்பு சம்பவம்

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 18 விமானங்களை சேவையில் இணைத்துக் கொள்ள ஆகாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அடுத்த 4 ஆண்டுகளில் மேலும் 54 விமானங்களை அறிமுகம் செய்து மொத்தம் 72 விமானங்களை இயக்க ஆகாசா ஏர் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Flight, India

அடுத்த செய்தி