ஹோம் /நியூஸ் /இந்தியா /

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஏகே ஆண்டனி மகன் திடீர் அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ஏகே ஆண்டனி மகன் திடீர் அறிவிப்பு

அணில் ஆண்டனி

அணில் ஆண்டனி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏகே ஆண்டனியின் மகன் அணில் ஆண்டனி அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பிபிசி ஊடகம் டாக்குமெண்டரி ஒன்றை வெளியிட்டு அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகனான அணில் ஆண்டனி பிரதமர் மோடிக்கு ஆதரவாக பதிவு வெளியிட்டார்.

அவர் நேற்று தனது ட்விட்டர் பதிவில், " பாஜகவுடன் எனக்கு பெரிய அளவில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், இந்தியர்கள் பிபிசி கருதுக்களை முன்வைப்பது ஏற்க தக்கது அல்ல. அந்நாட்டு அரசு ஸ்பான்சர் செய்து நடத்தும் ஊடகமான பிபிசி, நீண்டகாலமாகவே இந்தியாவுக்கு எதிரான எண்ணத்துடன் செயல்படுகிறது. இது தவறான முன்னுதாரணமாக மாறி, நமது இறையான்மையை குலைத்துவிடும் என்று பதிவிட்டார்.

அணில் ஆண்டனி காங்கிரஸ் கட்சியின் மாநில டிஜிட்டல் ஊடக ஒருங்கிணைப்பாளர், தேசிய சமூக வலைத்தள இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகிப்பவர். இவர் பிபிசி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தது விவாதத்தை கிளப்பிய நிலையில், இன்று அடுத்த பரபரப்பு அறிவிப்பை அணில் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

அப்பதிவில் அணில் ஆண்டனி, "எனது முந்தைய பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் தொலைப்பேசி அழைப்புகள் மூலம் வசைபாடுகின்றனர், ட்வீட்டை நீக்க வேண்டும் என வற்புறுத்துகின்றனர். இது போன்ற எதிர்நிலை பேச்சுக்கள் போக்குகளில் இருந்து விலகி மற்ற வேலைகளை செய்ய நான் விரும்புகிறேன். எனவே, காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி ராஜினாமா செய்கிறேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்து வழிநடத்திய கேரளா காங்கிரஸ் தலைமை, சசி தரூர் உள்ளிட்ட பலருக்கும் நன்றி" என அணில் ஆண்டனி கூறியுள்ளார்.

First published:

Tags: Congress, Kerala, PM Modi