பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்கு பிறகு நேரடியாக மோதுவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இரண்டு பேருக்கும் சரிசமமாக திரையரங்குகள் சமமாக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து இரு தரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
அண்மையில் விஜய் ரசிகர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் விஜய்யின் நடிப்பில் பொங்கலுக்கு வெளி வரும் "வாரிசு" படம் வெற்றி பெற வேண்டி பேனர் வைத்து வழிபாடு நடத்தினர்.
இந்நிலையில், விஜய் ரசிகர்களை போன்றே அஜித் ரசிகர்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அஜித்தின் துணிவு திரைப்படம் வெற்றி பெற வேண்டி பேனருடன் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அதன்படி மயிலாடுதுறையை சேர்ந்த ஐயப்பன், மகேஷ், சூர்யா ஆகிய மூன்று ரசிகர்கள் அஜித்தின் துணிவு படம் வெற்றி பெற வேண்டி வழிபாடு செய்தனர்.
இருதரப்பு மயிலாடுதுறை ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் நாயகர்களின் படம் வெற்றி பெற வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : கிருஷ்ணகுமார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Actor Ajith, Ajith fans, Ayyappan temple in Sabarimala, Thunivu