• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மஹாராஷ்டிராவின் துணை முதல்வராகிறார் அஜித் பவார்... உத்தவ் தாக்கரேவின் மகனுக்கும் அமைச்சரவையில் இடம்..!

மஹாராஷ்டிராவின் துணை முதல்வராகிறார் அஜித் பவார்... உத்தவ் தாக்கரேவின் மகனுக்கும் அமைச்சரவையில் இடம்..!

அஜித் பவார் | ஆதித்யா தாக்கரே

அஜித் பவார் | ஆதித்யா தாக்கரே

  • News18
  • Last Updated :
  • Share this:
    மஹாராஷ்டிராவில் சிவசேனா - என்.சி.பி - காங்கிரஸ் கூட்டணி அரசில் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகனும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளார்.

    மஹாராஷ்டிரா தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தன.

    திடீரென யாருமே எதிர்பார்க்காத வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாஜக உடன் கைகோர்த்தார். அதிகாலை 5 மணிக்கு பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.

    இதனை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மூன்று கட்சிகளும் முறையிட, தேவேந்திர பட்நாவிஸ் மறுநாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனை அடுத்து, பட்நாவிஸ் ராஜினாமா செய்தார்.

    பின்னர், மூன்று கட்சிகளின் கூட்டணி உறுதியாகி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்றார். மூன்று கட்சிகளில் இருந்தும் 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். எனினும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் பேச்சுவார்த்தை நீடித்து வந்தது.

    இந்த நிலையில், இன்று மாலை அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார். முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே அமைச்சராக பொறுப்பேற்க இருக்கிறார்.

    நிதி, உள்துறை போன்ற முக்கிய துறைகள் தேசியவாத காங்கிரஸ் அமைச்சர்கள் வசம் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் இருந்தும் அமைச்சரவையில் சிலர் இணைய உள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: