Home /News /national /

நாட்டுப் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு! தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து

நாட்டுப் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பு! தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து

அஜித் தோவல்

அஜித் தோவல்

இந்தநிலையில், அவரது பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு பணி நீட்டிப்பு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

  • News18
  • Last Updated :
    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து வழங்கி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அஜித் தோவல் தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிவருகிறது. அவர், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்றத் தாக்குதலுக்குப் பிறகு, எல்லைத் தாண்டி பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியதில் அஜித் தோவலின் பங்கு முக்கியமானது.

    மேலும், இந்தியா, சீனா, பூடான் எல்லைப் பகுதியான டோக்லாமில் இந்திய படைகளை நிறுத்தியதிலும் அஜித் தோவலின் திட்டமிடல் முக்கியமானது. அத்தகைய செயல்களால், அஜித் தோவல் மிகவும் பாரட்டப்பட்டார். இந்தநிலையில், அவரது பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு பணி நீட்டிப்பு அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    மேலும், அவருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    Also see:

    Published by:Karthick S
    First published:

    Tags: Cabinet

    அடுத்த செய்தி