ஹோம் /நியூஸ் /இந்தியா /

126 நாடுகளிலிருந்து மகாத்மா காந்தியின் ஸ்டாம்புகளை சேகரித்த நபர்!

126 நாடுகளிலிருந்து மகாத்மா காந்தியின் ஸ்டாம்புகளை சேகரித்த நபர்!

அஞ்சல் தலை சேகரிப்பாளர் அஜய்

அஞ்சல் தலை சேகரிப்பாளர் அஜய்

27 ஆண்டுகளாக 126 நாடுகளில் வெளியிடப்பட்ட காந்தியின் அஞ்சல் தலைகளை அஜய் என்ற நபர் சேகரித்து வைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

உலகில் 126 நாடுகளில் வெளியிடப்பட்ட காந்தியின் அஞ்சல் தலைகளை ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் என்றவர் சேகரித்து பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பழமை மற்றும் பாரம்பரியம் மிகுந்த விஷயங்களை நாம் கண்ணால் பார்க்கும்போது அல்லது காதுகளால் கேட்கும்போது மிகுந்த ஆச்சரியம் கொள்வோம். ஆனால், பராம்பரியமான பொக்கிஷங்களைச் சேகரித்து வைக்கும் ஆர்வம் ஒரு சிலருக்குத் தான் இருக்கும்.

அந்த வகையில் நம்மில் சிலர் பழைய ரூபாய்த் தாள்கள், பழைய நாணயங்கள் போன்றவற்றை சில காலம் சேர்த்து வைத்திருப்போம். ஆனால், இவற்றைத் திரட்டுவதற்காக நாம் அதிகம் மெனக்கெட்டிருக்க வாய்ப்பில்லை. ஏதோ கைக்குக் கிடைத்ததைச் சேகரிக்கும் வழக்கம் தான் நம்மிடையே இருக்கும்.

ஆனால், ராஜஸ்தான் மாநிலத்தில் மகாத்மா காந்தியின் மீது பற்று கொண்ட அஜய் என்ற நபர், 126 நாடுகளில் இருந்து காந்தியின் அஞ்சல் தலைகளைத் திரட்டி சேகரித்துள்ளார். அவரின் ஊரான தோல்பூர் மாவட்டத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்பது தான் அவரின் எண்ணமாக உள்ளது. டிவி, மொபைல் என்று மூழ்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினரிடம் பாரம்பரிய விஷயங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மகாத்மா காந்தியைக் கௌரவிக்கும் வகையில் உலகின் பல நாடுகளில் நினைவு அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதை அனைத்தையும் சேகரிப்பது என்பது பாராட்டிற்கு உரியச் செயலாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றை இத்தனை ஆண்டு சேகரிப்பதற்கு நீண்ட பொறுமையும் ஊக்கமும் தேவைப்படுகிறது.

வேடிக்கைகளை மட்டுமே ரசித்துப் பழகும் உலகில், பாரம்பரியம், கலை பொக்கிஷம் என்று நீங்கள் கிளம்பினால் உங்களைச் சுற்றியிருப்பவர்கள், உங்களை எப்படிப் பார்ப்பார்களோ, அதேதான் அஜய்க்கும் நடந்தது. பொக்கிஷங்களைத் திரட்ட 27 ஆண்டுகளைச் செலவிட்டுள்ள போதிலும், தொடக்கத்தில் மிகவும் கசப்பான அனுபவங்கள் தான் மிஞ்சியது என்று அஜய் தெரிவிக்கிறார். கடந்த 2007ஆம் ஆண்டு பார்லி என்ற இடத்தில் முதலாவது அஞ்சல் தலை கண்காட்சியை அஜய் நடத்தினார். அப்போது முதல் எண்ணற்ற முறை பள்ளிகளில் பாரம்பரிய கண்காட்சியை அவர் நடத்தியுள்ளார்.

Also Read : தலையில் ஹெல்மெட் போல சோலர் மின்விசிறி.. 77 வயது தாத்தாவின் புதுமையான ஐடியாவுக்கு குவியும் பாராட்டு!

அஜய்யின் முயற்சிகளுக்கு, அவரது நண்பரும், வழக்கறிஞருமான அருண் மங்கல் உதவி செய்து வருகிறார். அதே சமயம், அஜயை பார்ப்பதற்காக எண்ணற்ற மக்கள் வருகின்றனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அஜயை மனதார பாராட்டுகின்றனர். மற்றவர்கள், இதைச் சேகரித்து என்ன செய்யப் போகிறீர்கள், இது தேவையற்ற வேலை, பணவிரயம் செய்ய வேண்டாம் என்று எதிர்மறையான அறிவுரைகளைச் சொல்லிச் சென்றுள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டில் தோல்பூர் ஆட்சியர் அஜய்யை அழைத்துப் பாராட்டியதுடன், காந்தி ஜெயந்தி நாளில் ஸ்டாம்ப் கண்காட்சியை நடத்த ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்வு அஜய்க்கு பெரும் நம்பிக்கையைத் தருவதாக அமைந்தது.

பல நாடுகளின் நாணயங்கள், அஞ்சல் தலை சேகரிப்பு

மொத்தம் 200 நாடுகளின் அஞ்சல் தலைகள், 80 நாடுகளின் நாணயங்கள் மற்றும் ரூபாய்த் தாள்கள், 35 நாடுகளின் பாலிமர் பிளாஸ்டிக் ரூபாய்த் தாள்கள் போன்றவற்றை அஜய் சேகரித்துள்ளார். 2019ஆம் ஆண்டில் உலகில் 133 நாடுகள் காந்தியின் அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ள நிலையில், அதில் 126 அஞ்சல் தலைகளை அஜய் சேகரித்துள்ளார்.

முதலாவது அஞ்சல் தலைகள்

இந்தியாவில் முதன் முதலாக 1854ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை, 1947ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் அஞ்சல் தலை, 1950 ஆம் ஆண்டு குடியரசு இந்தியாவில் முதல்முறை வெளியிடப்பட்ட அஞ்சல் தலை மற்றும் பழமையான செய்தித்தாள்கள், ஆவணங்கள், கலை பொக்கிஷ பொருட்கள் என ஏராளமானவற்றை அஜய் சேகரித்து வைத்துள்ளார்.

Published by:Janvi
First published:

Tags: Gandhi, Mahatma Gandhi, Rajastan