மாணவர்கள் போராட்டம் ஒருநாளும் வீணாகப் போகாது! தாக்கப்பட்ட ஆய்ஷி கோஷுக்கு ஆதரவு தெரிவித்த பினராயி விஜயன்

மாணவர்கள் போராட்டம் ஒருநாளும் வீணாகப் போகாது! தாக்கப்பட்ட ஆய்ஷி கோஷுக்கு ஆதரவு தெரிவித்த பினராயி விஜயன்
பினராயி விஜயன் ஆய்ஷி கோஷ்
  • News18
  • Last Updated: January 11, 2020, 7:12 PM IST
  • Share this:
மாணவர்களின் போராட்டம் ஒருநாளும் வீணாகப் போகாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷி கோஷ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகமூடி அணிந்த குண்டர்களால் கடுமையாக தாக்கப்பட்டார். அந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ஆய்ஷி கோஷ் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஆய்ஷி கோஷ்க்கு புத்தகம் ஒன்றை பினராயி விஜயன் பரிசளித்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், தாக்குதலில் காயமடைந்த மாணவர்களின் நலன் குறித்து விசாரித்ததாகவும், தனது ஆதரவை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மாணவர்களின் கொள்கை உறுதியின் மேல் நம்பிக்கை உள்ளதாகவும், அவர்களின் போராட்டம் ஒருபோதும் வீண்போகாது என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Also see:

First published: January 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading