ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா பரிசோதனை.. நெகட்டிவ் சான்றிதழ்.. கட்டுப்பாடுகளை இறுக்கும் இந்தியா!

கொரோனா பரிசோதனை.. நெகட்டிவ் சான்றிதழ்.. கட்டுப்பாடுகளை இறுக்கும் இந்தியா!

ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை

ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை

இந்த பரிசோதனை பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்யப்பட்டிருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளுக்கு இன்று முதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனாவில் புதிய வகை கொரோனாவான பி.எப்-7 வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வகை வைரஸ் ஒருவரிடம் இருந்து 16 பேருக்கு பரவும் வீரியம் கொண்டது தெரியவந்துள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்கும் விதமாக சீனா, சிங்கப்பூர், ஹாங்ஹாங், கொரியா, தாய்லாந்து மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனை பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக செய்யப்பட்டிருக்க வேண்டும், ஏர் சுவிதா வலைதளத்தில் சுயஅறிவிப்பு படிவங்களை சமர்ப்பிப்பதுடன் கொரோனா பரிசோதனைக்கான ஆர்டி-பிசிஆர் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமானங்களில் வந்திறங்கும் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தற்போதைய நடைமுறையும் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது

First published:

Tags: Corona, CoronaVirus, COVID-19 Test