மத்திய அரசுக்கு ₹ 2,400 கோடியை செலுத்தாமல் உள்ள விமான சேவை நிறுவனங்கள்
மத்திய அரசுக்கு ₹ 2,400 கோடியை செலுத்தாமல் உள்ள விமான சேவை நிறுவனங்கள்
மாதிரி படம்
விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கான வாடகை தொகை இரண்டாயிரத்து 400 கோடி ரூபாயை, பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் வழங்காததால், AIRPORTS AUTHORITY OF INDIA கடன் சுமையில் தள்ளப்பட்டுள்ளது.
விமான நிலையங்களை பயன்படுத்துவதற்கான வாடகையை, ஏர்போர்ட்ஸ் AUTHORITY ஆஃப் இந்தியா அமைப்புக்கு , விமான சேவை நிறுவனங்கள் செலுத்துவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இழப்புகளை குறிப்பிட்டு, ஏராளமான விமான சேவை நிறுவனங்கள், மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய இரண்டாயிரத்து 400 கோடி ரூபாயை தற்போது வரை செலுத்தாமல் உள்ளன.
இதில் ஏர்- இந்தியா நிறுவனம் மட்டும், 1887 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளது. தனியார் விமான சேவை நிறுவனங்களுள், இண்டிகோ நிறுவனம் 150 கோடி ரூபாயும், ஸ்பைஸ் ஜெட் 140 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளன.
அதேபோல், கோ-ஏர் நிறுவனம் 58 கோடி ரூபாயும், ஏர்-ஆசியா 21 கோடி ரூபாயும் மற்றும் விஸ்தாரா நிறுவனம் இரண்டரை கோடி ரூபாயும் செலுத்த வேண்டும்.
கொரோனா பொது முடக்கத்தின் முதல் இரண்டு மாதங்களில், 80 சதவீதம் அளவுக்கு விமான சேவை வருவாய் வீழ்ச்சி அடைந்ததாக, இந்திய விமான நிலையங்களுக்கான ஆணையகம் தெரிவித்தது.
இதனால் கடந்தாண்டு 3600 கோடி ரூபாய்க்கு லாபம் ஈட்டிய ஏர்போர்ட்ஸ் AUTHORITY ஆஃப் இந்தியா, இந்தாண்டு 1500 கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.