ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

news18
Updated: June 13, 2018, 5:35 PM IST
ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கார்த்தி சிதம்பரம்
news18
Updated: June 13, 2018, 5:35 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ப.சிதம்பரம் கடந்த 2006-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்தபோது மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இந்த முதலீடு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்த நிலையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்ததோடு, கார்த்திக்கு சொந்தமான  1.16 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் முடக்கியது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரம் மீது இன்று அமலாக்கப்பிரிவு டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

99 பக்க குற்றபத்திரிகையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டம் 45-ன் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறை கால சிறப்பு நீதிபதி ரூபி அல்கா குப்தா, விசாரணையை ஜூலை 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...