6,000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத ஏர்செல்

news18
Updated: March 6, 2018, 4:28 PM IST
6,000 ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காத ஏர்செல்
ஏர்செல் சேவை மையம் (கோப்பு படம்)
news18
Updated: March 6, 2018, 4:28 PM IST
கிட்டத்தட்ட 6,000 ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஊதியத்தை ஏர்செல் நிறுவனம் வழங்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதுமட்டுமல்லாமல் ஏர்செல் அலுவலகங்களில் தண்ணீருக்கான கட்டணம், மின்சாரக் கட்டணத்தை பாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த சில தினங்களுக்கு முன், ஏர்செல் நிறுவனத்தின்  வாடிக்கையாளர்களுக்கு தொலைத்தொடர்பு பிரச்னை ஏற்பட்டது.  போட்டி நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் தவித்து வந்த ஏர்செல் நிறுவனம் கடனில் சிக்கியிருப்பதாக தெரியவந்தது.

இதனால் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தின் சேவையை  பெற அறிவுறுத்தப்பட்டனர்.  இதையடுத்து கடனில் மூழ்கிய ஏர்செல் நிறுவனம் திவால் மனுவை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் அளித்தது. மேலும் வரும் ஏப்ரல் மாதத்துடன் தனது சேவையை முடித்துக் கொள்வதாகவும் அறிவித்தது.
இந்நிலையில், 6,000 ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்துக்கான ஊதியத்தை ஏர்செல் நிறுவனம் வழங்காமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஏர்செல் நிறுவனத்தின் அதிகாரி ஜானக் துவார்கதாஸ் கூறுகையில், “மிகப் பெரிய பிரச்னையில் ஏர்செல் நிறுவனம் சிக்கியுள்ளது. பொருளாதார ரீதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர்செல் நிறுவனம் எடுத்துவருகிறது. விரைவில் ஊழியர்களின் பிரச்னைகள் சரிசெய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.
First published: March 6, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்