காற்று மாசுவை குறைத்தால் நுரையீரல் மட்டுமன்றி சிறுநீரகத்திற்கும் நல்லது - சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!
காற்று மாசுவை குறைத்தால் நுரையீரல் மட்டுமன்றி சிறுநீரகத்திற்கும் நல்லது - சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!
காற்றின் மாசுபாடு
Air Pollution : காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் சீராவதோடு, சிறுநீரகத்தின் ஆரோக்கியமும் சீராக இருக்கும் என்றும் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த பூமியில் உள்ள எல்லா வகையான உயிரினங்களுக்கும் மிக முக்கியமாக தேவைப்பட கூடிய ஒன்று சுத்தமான காற்று தான். காற்று இல்லையென்றால் எந்த ஜீவராசிகளாலும் சுவாசிக்க இயலாது. பிறகு இந்த பூமியில் எந்த உயிரினங்களும் உயிரோடு இருக்காது. இவ்வளவு முக்கியத்துவம் கொண்ட காற்றை தான் நாம் பல்வேறு வகையில் அசுத்தம் செய்து வருகிறோம். நமது நவீன வாழ்க்கை முறையின் காரணமாக காற்றின் மாசுபாடு பல மடங்கு அதிகரித்துள்ளது.
காற்று மாசுபட்டால் கொஞ்சம் கொஞ்சமாக நோய்களின் ஊடுருவல் நமது உடலை ஆக்கிரமிக்கும். முதலில் இவை பாதிக்க கூடியது நமது நுரையீரலை தான். உடலில் உள்ள மிக முக்கிய உறுப்பு நுரையீரல். இது பெரிதும் பாதிக்கப்பட காற்று மாசு தான் காரணம். காற்று மாசுவின் காரணமாக இதற்கடுத்ததாக சிறுநீரகமும் மிகவும் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். லண்டனை சேர்ந்த கிங்க்ஸ் கல்லூரியில் செய்துவந்த ஆய்வின் முடிவில் இதை அறிந்து கொண்டுள்ளனர்.
அதே போன்று காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தி வந்தால் நுரையீரல் ஆரோக்கியம் சீராவதோடு, சிறுநீரகத்தின் ஆரோக்கியமும் சீராக இருக்கும் என்றும் ஆய்வு செய்துள்ளனர். காற்று மாசுவின் அளவானது PM 2.5 அளவுக்கும் கீழே குறைந்து வந்தால் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக கண்டறிந்து உள்ளனர். இந்த ஆய்வை சுமார் 5115 நபர்களை கொண்டு செய்யப்பட்டது. இந்த ஆய்வை பல காலமாக, பல்வேறு தரவுகளை வைத்து செய்து வந்தனர்.
காற்று மாசுவின் அளவு குறைந்தால் குளோமிருளார் பில்டரேஷன் ரேட் 0.42 mL/min ஆக உயர்கிறது. அதே போன்று இரத்த யூரியா நைட்ரஜன் அளவும் குறைகிறது. முக்கியமாக யூரிக் அமிலத்தின் அளவு 0.06 mg/dL என்கிற முறையில் குறைந்து விடுகிறது. இந்த தரவுகளின் மூலம் பல வித சிறுநீரக நோய்களை காற்று மாசுபாடு குறைந்தால் ஏற்படாமல் தடுக்க முடியும் என்பதை உறுதி செய்துள்ளனர்.
குறிப்பாக நீண்ட நாட்களாக சிறுநீரக நோய்கள் கொண்டவர்களுக்கு இந்த ஆய்வின் முடிவுகள் மிகப்பெரிய மாற்றத்தை தர உள்ளது. நம்மை சுற்றி இருக்க கூடிய இடங்களில் மாசுபாடுகள் அதிகம் இருந்தால் அவை சிறுநீரக நோய்களை உருவாக்கும். எனவே இந்த முடிவின் மூலம் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சுத்தமான காற்று கிடைத்தால் அவர்களின் சிறுநீரக செயல்பாடு சீராகுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
பெருகி வரும் மக்கள் தொகை, அதிக வாகனங்களை பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாடு, பொருட்களை எரித்தல் போன்ற பல காரணிகளால் காற்று மாசு அதிகரிக்கிறது. இதனால் பல பாதிப்புகளும் உருவாக்குகிறது. இதன் தாக்கத்தால் இதய நோய்கள், உடல் செயல்திறன் பாதிப்பு, மன நோய்கள், நரம்பு சார்ந்த நோய்கள் போன்றவை ஏற்பட கூடும். எனவே நாமம் சுவாசிக்கும் காற்றை அசுத்தப்படுத்தாமல் பார்த்து கொள்ள வேண்டியது நமது கடமையாகும்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.