ஹோம் /நியூஸ் /இந்தியா /

கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாசு குறைந்தது... நாடாளுமன்றத்தில் தகவல்

கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாசு குறைந்தது... நாடாளுமன்றத்தில் தகவல்

இரவு ஊரடங்கு

இரவு ஊரடங்கு

பல நகரங்களில் தொழிற்சாலைகள் மூடல், வாகனங்கள் இயக்கம் குறைதல், கட்டுமானப் பணிகள் இல்லாமை மற்றும் மனித நடவடிக்கைகள் இல்லாததால் காற்றின் தரத்தில் தற்காலிக முன்னேற்றம் ஏற்பட்டது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மாசு குறைந்ததுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, மாநிலங்களவையில் அளித்துள்ள தகவலில் கூறியிருப்பதாவது-

  மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, 19 முக்கிய நதிகளின் நீரின் தரக் கண்காணிப்பு, ஊரடங்கு காலத்தில் நாட்டில் நதி நீரின் தரத்தில் ஓரளவு முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.

  கரிம மாசுபாடு குறைப்பு, மேற்பரப்பு நீர்நிலைகளில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பு ஆகியவை பெருந்தொற்று காலத்தில் காணப்பட்டன.

  இதையும் படிங்க - ஆளும் கட்சி பிரமுகர் அழுத்தம்.. தனியார் பள்ளி நிர்வாகம் அட்டூழியம்.. மன வேதனை தாங்காமல் மாணவி தற்கொலை..

  இதேபோல், பல நகரங்களில் தொழிற்சாலைகள் மூடல், வாகனங்கள் இயக்கம் குறைதல், கட்டுமானப் பணிகள் இல்லாமை மற்றும் மனித நடவடிக்கைகள் இல்லாததால் காற்றின் தரத்தில் தற்காலிக முன்னேற்றம் ஏற்பட்டது.

  டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், காசியாபாத், நொய்டா, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, பாட்னா மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் சராசரியாக பிஎம்2.5, பிஎம்10, எஸ்ஓ2 மற்றும் என்ஓ2 ஆகியவற்றின் செறிவுகள் குறைந்தன.

  இதையும் படிங்க - உ.பி முதல்வராக 2வது முறையாக இன்று மீண்டும் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்..

  மத்திய அரசின் முக்கிய அமைச்சகமான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், சுற்றுச்சூழல் அடிப்படையிலான அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்வதற்கும், இயற்கை வளங்களை நிர்வகிப்பதற்குமான துறைகள், மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்கின்றன.

  கோவிட்-19 நோயாளிகளின் சிகிச்சை, நோயறிதல் மற்றும் தனிமைப்படுத்தலின் போது உருவாகும் கழிவுகளைக் கையாளுதல், சுத்திகரிப்பு மற்றும் அகற்றுவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்துள்ளது.

  இந்த வழிகாட்டுதல்கள் கோவிட்-19 தொடர்பான கழிவுகளின் பாதுகாப்பான மேலாண்மைக்கான விரிவான நடவடிக்கைகளை வழங்குகின்றன.  இவ்வாறு அமைச்சர் அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Musthak
  First published:

  Tags: Air pollution, Lockdown, Pollution