Home /News /national /

டெல்லியில் 2-வது முறையாக அபாய அளவைத் தொட்ட காற்று மாசு - திணறும் மக்கள்

டெல்லியில் 2-வது முறையாக அபாய அளவைத் தொட்ட காற்று மாசு - திணறும் மக்கள்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

டெல்லி மட்டுமின்றி குருகிராம், காசியாபாத் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களிலும் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது.

  • News18
  • Last Updated :
டெல்லியில் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக காற்று மாசு அபாய அளவை தொட்டுள்ளதால் மக்கள் திணறி வருகின்றனர். இதனால் நாளை மறுநாள் வரை தொழிற்சாலைகளை மூடவும், கட்டுமானப் பணிகள் அனைத்தையும் நிறுத்தவும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

டெல்லியில் கடுமையான குளிருடன், காற்று மாசும் சேர்ந்து மக்களை வதைத்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி டெல்லியில் காற்று மாசு அளவு முதல்முறையாக அபாய அளவை தாண்டியது.

காற்றின் தரக்குறியீடு 571 என்ற அளவில் உச்சம் தொட்டது. தீபாவளியையொட்டி பட்டாசு வெடித்ததாலும், பனி மூட்டத்தாலும் டெல்லி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்று மாசு உச்சத்தை தொட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக நேற்றும், இன்றும் டெல்லியில் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது. காற்றின் தரக்குறியீடு   ஞாயிற்றுகிழமை (டிச.23) 450 ஆகவும், இன்று (டிச.24) 449 ஆகவும் பதிவாகி உள்ளது.

காற்று தரக்குறியீடு 100-க்குள் இருந்தால் மட்டுமே உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற நிலையில், 5 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் வெளியே வர முடியால் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி குருகிராம், காசியாபாத் மற்றும் நொய்டா ஆகிய நகரங்களிலும் காற்று மாசு அபாய அளவை எட்டியுள்ளது.

இதே நிலை நீடித்தால் நிலைமை மோசமாகி விடும் என்று எச்சரித்துள்ள மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நாளை மறுநாள் வரை டெல்லி, குருகிராம், காசியாபாத், நொய்டாவில் தொழிற்சாலைகளை உடனடியாக மூடவும், கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது.

Also watch

Published by:DS Gopinath
First published:

Tags: Air pollution, Delhi

அடுத்த செய்தி