கடந்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூரில் 10% காற்று மாசு அதிகரிப்பு

பெங்களூரில் காற்று மாசு குறைந்துள்ளதாக அரசு கூறுகையில், அதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களும் முற்றிலும் மறுப்பதோடு, மாசு அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெங்களூரில் 10% காற்று மாசு அதிகரிப்பு
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: July 14, 2020, 8:56 PM IST
  • Share this:
-கபில் காஜல்

பெங்களூரின் காற்று மாசு அதிகரிப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் சர்சைக்குரிய ஒன்றாகவே இருந்து  வருகின்றன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது காற்று மாசுபாட்டின் அளவு குறைந்துவிட்டதாக கர்நாடக மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (KSPCB) தெரிவித்திருக்கிறது.

இதனை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களும் முற்றிலும் மறுப்பதோடு, மாசு அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.


பெங்களூரில் மாசு காட்டுபாடு குறித்து கர்நாடக மாநில மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் எச். லோகேஷ்வரி கூறும்போது,

கடந்த ஐந்து ஆண்டுகளாக பெங்களூரில்  மாசுபாடு தொடர்ந்து குறைந்து  கொண்டு தான் வருகின்றது.  2014 முதல் 2018 வரை நடந்த ஆய்வுகளின்படி வருடாந்திர சராசரி காற்றின் தரக் குறியீடு (AQI) மதிப்புகள்  ‘மிதமான நிலை என்பதிலிருந்து  ‘திருப்திகரமாக’ என்ற நிலைக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 2014 ஆம் ஆண்டின் புள்ளி விபரங்களுடன் ஒப்பிடும்போது, ​​பிஎம் 10 இன் வருடாந்திர சராசரி 2018 இல் 28 சதவீதமாக ஆக குறைந்துள்ளது, அதே நேரத்தில் பிஎம் 2.5 இன் 2015 முதல் 2017 வரை 29 சதவீதமாக ஆக குறைந்துள்ளதாகவும் டாக்டர் எச்.லோகேஷ்வரி கூறுகிறார்.பெங்களூருவில் உள்ள கே.எஸ்.பி.சி.பியின் கண்காணிப்பு நிலையங்களிலிருந்து வரும் காற்று மாசுபாடு புள்ளி விபரங்களும், காற்று மாசுபாடு குறைவதைக் காட்டுகிறது. PM10 மற்றும் PM2.5 ஐ சுவாசிப்பதால் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொற்று போன்ற பல ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான புள்ளி விபரம்:

இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் பேராசிரியர் டாக்டர் டி.வி.ராமச்சந்திரா கூறும்போது, கர்நாடக மாநில மாசு கட்டுபாட்டு வாரியம் மூலம் வழங்கப்படும் காற்று மாசுபாட்டிற்கான புள்ளி விபரங்கள் தவறான நடைமுறையாகும் என விமர்சித்துள்ளனர்.

பெங்களூரு போன்ற ஒரு பெரிய நகரத்தில் தவறான சராசரி புள்ளி விபரங்களாக உள்ளன. மெஜஸ்டிக் போன்ற பெரிய நகரங்களில் அதிகளவிலான மாசுபட்ட பகுதிகள் உள்ளன. அதேபோல் ஜெயநகர், லால்பாக் போன்ற தூய்மையான பகுதிகளும் இங்கு உள்ளன.  இந்த தூய்மையான பகுதிகள் அதிகளவில் மாசு ஏற்படும் பகுதிகளை மறைக்கின்றது. எந்தெந்த காரணிகளால் காற்று மாசு ஏற்படுகிறது என்பது குறித்து சரியான, முழுமையான புள்ளிவிபரங்கள்  இல்லை என்றும், கே.எஸ்.பி.சி.பி பொதுமக்களுக்கு தவறான தகவல்களை வழங்கின்றது  எனவும் அவர் குற்றச்சாட்டினார்.

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அறக்கட்டளையின்  நிர்வாக குழு உறுப்பினர் டாக்டர் யெல்லபா ரெட்டி கூறும்போது,  காற்று மாசு அடைவது குறித்து அரசு வழங்கும் புள்ளி விபரங்களை முற்றிலுமாக மறுக்கும் இவர், அந்த புள்ளி விபரங்கள் தவறாக இருப்பதாக தெரிவிக்கின்றார்.

புள்ளிவிபரங்களில் உள்ள பொருத்தமற்ற தன்மையால் அவற்றை நம்பவில்லை என்கின்றார். மேலும் அவர் கூறுகையில், 75% கண்காணிப்பு நிலையங்கள் வேலை செய்யவில்லை என்றும், சில கண்காணிப்பு நிலையங்கள் பகுதி நேரங்களில் மட்டுமே வேலை செய்கின்றது என்றும், மீதமுள்ள நிலையங்களும் மிகக் குறைந்த நாட்களில் புள்ளி விபரங்களை  தருகின்றன . எனவே  இத்தகைய கண்காணிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும்  புள்ளி விபரங்கள்  குறிப்பிட்ட  அளவு மட்டுமே கிடைக்கபெறும் என யெல்லப்பா ரெட்டி கூறுகின்றார்.

மேலும் அவர் கூறும்போது, சுற்றிலும் பசுமை நிலையில் உள்ள இடங்களில் மட்டுமே கண்காணிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன, கார்நாடக மாநில அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் அமைந்துள்ள எம்.ஜி. சாலையில் கூட  மாசு கண்காணிப்பு நிலையம் அமைக்கப்பட வில்லை இல்லை எனவும் கூறுகின்றார்.  அங்கு ஏற்படும்  மாசு   நிலை மதிப்புகள் அதிகமாக இருக்க கூடும் என்பதால் அங்கு கண்காணிப்பு நிலையத்தை அமைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

அதேபோல் மாசு கண்காணிப்பு நிலையங்கள் அனைத்தும் முதல் மாடிக்கு சமமான உயரத்தில் நிறுவப்பட்டுள்ளன.  எனவே அவை தரையில் இருந்து உண்மையான மாசு  மதிப்பீட்டை கணக்கீட முடியாது .பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் மற்றும் பீன்யா உள்ளிட்ட தொழில்துறை அதிகம் உள்ள பகுதிகளில் கூட மாசு குறித்த சரியான புள்ளி விபரங்கள் கிடைக்கபெறவில்லை என்று கூறினார்.

இந்த பிரச்சினையைப் புரிந்துகொள்வது மிக முக்கியம். சரியான புள்ளிவிபரங்கள் இல்லை என்றால் பிரச்சினைகள் புறக்கணிக்கப்படும். மேலும் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாசு கட்டுபாட்டு வாரியத்தில் உள்ள இயந்திரங்கள் சுமார் 20 ஆண்டுகள் முன்னர் வாங்கப்பட்ட பழைமையான இயந்திரங்கள் ஆகும். அவற்றில் பல பழுந்துடைந்துள்ளன. இந்த இயந்திரங்கள் மூலம் துல்லியமான புள்ளி விபரங்களை தர முடியாது. எனவே புதிய இயந்திரங்களை மாற்ற வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.




படிக்க: BREAKING | தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்ட இன்றைய கொரோனா பாதிப்பு

படிக்க: ஈரானை அடுத்து இலங்கையும்...! ரத்தாகும் இந்தியா உடனான திட்டங்கள்








அரசு சாரா சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான ஈக்கோ-வாட்சின் இயக்குனர் அக்‌ஷய் ஹெபில்கர் கூறுகையில், பெங்களூர் போன்ற பெரும் நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில், மாசுபாடு காரணமாக உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் கர்நாடக மாநில மாசு கட்டுபாட்டு வாரியம் பெங்களூரில் மாசு குறைந்து வருவதாகக் கூறுவது கவலை அளிக்கிறது . அவர்கள் காற்று மாசுபாட்டைக் குறைத்து காட்டுவதே ஒரே நோக்கம் கொண்டுள்ளனர் எனவும் அவர்  குறிப்பிட்டுகிறார்.

பெங்களூர் போன்ற பெரும் நகரங்களில் மாசு அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும் அதே சூழ்நிலைகளில், மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. மரங்களில் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைடை  தான், மாசுவினால் ஏற்படும் வாயுவை உறிஞ்சுவதற்கு உதவிகரமாக இருப்பதாகவும், ஆனால் நாம் மரங்களின் எண்ணிக்கை குறைத்து கொண்டே வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்து வரும் சூழலில், நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், பெங்களூரு விரைவில் அடுத்த டெல்லியாக மாறிவிடும் என எச்சரித்துள்ளார்.

(இந்த செய்தியின் எழுத்தாளர் 101Reporters.com-ன் அங்கத்தினர்.)
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading