ஹோம் /நியூஸ் /இந்தியா /

காற்று மாசால் திணறும் டெல்லி… கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரம்..

காற்று மாசால் திணறும் டெல்லி… கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரம்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

பஞ்சாப்பில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் டெல்லிவாழ் மக்கள் கடுமையான காற்று மாசை எதிர்கொண்டு வருகின்றனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Delhi, India

  டெல்லியில் நிலவும் மிக மோசமான காற்று மாசால் பிஎஸ்-4 டீசல் வாகனங்கள் மற்றும் லாரிகள் நகர்ப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது…

  ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மிகவும் மோசமான நிலையில் மாசடைவது வழக்கம். இதனால் டெல்லி மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதங்களில் நச்சுக் காற்றை சுவாசிக்கும் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதே போல் இந்த ஆண்டும் பல்வேறு காரணிகளால் டெல்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்றின் தரக்குறியீட்டு எண் 450ஐ தொட்டுள்ளது. இதனால் காற்று மிக மோசமான நச்சுத்தன்மையை எட்டியுள்ளது.

  காற்று தர மேலாண்மை ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து டெல்லி நகருக்குள் அதிக புகையை வெளியிடும் பிஸ்-4 ரக டீசல் வாகனங்கள், கனரக லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் மாநிலத்தில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவதால் அங்கு எழும் புகை காற்றின் வேகத்தில் டெல்லிக்குள் வருகிறது. இதனால் காற்று மாசடைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  Read More : தன்னை தானே சாட்டையால் அடித்துகொண்ட ராகுல் காந்தி.... காரணம் இதுதானா?

  தற்போது காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் புகை அதிகளவில் டெல்லிக்குள் வருகிறது. எனவே காற்று மிக வேகமாகவும், அதிகமாகவும் மாசடைவதாக கூறப்படுகிறது. காற்று மாசால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் மிகவும் ஆரோக்கியமாக இருப்பவர்களே இந்த காற்று மாசால் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளதாகவும், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். வடமேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் பஞ்சாப்பின் வயல் வெளிகளில் இருந்து புகை டெல்லிக்குள் வருகிறது. இது தான் காற்று மாசிற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

  காற்று வீசும் திசை தென்மேற்குப் பகுதியாக மாறினால் மட்டுமே புகை டெல்லிக்கு வருவது கட்டுப்படுத்தப்படும் என்றும், அதன் பிறகு தான் டெல்லியில் காற்று மாசு படிப்படியாக குறையும் என்றும் மத்திய மாசுக் கடடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லியில் ஜஹாங்கிர்புரி பகுதி தான் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக பதிவாகியுள்ளது. அங்கு காற்று தரக்குறியீட்டு எண் 480 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் வேகம் மற்றும் திசை நாளை முதல் மாறலாம் என்றும், அதன் பிறகு டெல்லியில் காற்றின் தரம் படிப்படியாக உயரும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

  ஒவ்வொடு ஆண்டும் இதே கால கட்டத்தில் பஞ்சாப்பில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகளால் டெல்லிவாழ் மக்கள் கடுமையான காற்று மாசை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Air pollution, Delhi