இது தேசவிரோத செயல்... நீதிமன்றம் செல்வேன்...! மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி

Air India |

இது தேசவிரோத செயல்... நீதிமன்றம் செல்வேன்...! மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி
சுப்பிரமணியன் சுவாமி.
  • News18
  • Last Updated: January 27, 2020, 1:49 PM IST
  • Share this:
மத்திய அமைச்சரவை ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளதை தேச விரோதச் செயல் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி விமர்சித்துள்ளார்.

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 விழுக்காடு பங்குகளை விற்க கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. ஆனால் அதனை வாங்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை.

இந்நிலையில் தற்போது ஏர் இந்தியாவின் 100 விழுக்காடு பங்குகளையும் விற்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாங்கும் நிறுவனம் ஏர் இந்தியாவின் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முழுமையாக கையகப்படுத்தலாம்.


வாங்க விருப்பம் உள்ளவர்கள் வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தை வாங்குபவர்கள் அதன் 2,300 கோடி ரூபாய் கடனையும் ஏற்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏர் இந்தியாவை விற்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தேச விரோத செயல் எனவும், நீதிமன்றத்திற்கு எதிராக தான் செல்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
First published: January 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading