ஹோம் /நியூஸ் /இந்தியா /

போதையில் தடுமாறும் பயணிகள்.. விமானத்தில் மது அருந்த வந்தது புதிய கட்டுப்பாடு..!

போதையில் தடுமாறும் பயணிகள்.. விமானத்தில் மது அருந்த வந்தது புதிய கட்டுப்பாடு..!

மாதிரி படம்

மாதிரி படம்

மது அருந்திய பயணியை பச்சை,மஞ்சள், சிவப்பு என்று மூன்று பிரிவுகளாக மதிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi, India

விமானங்களில் மது போதையில் பயணிகள் அநாகரீகமாக நடந்துகொள்ளும் சம்பங்கள் அதிகரித்து வரும் சூழலில், பயணிகளுக்கு மது வழங்கும் கொள்கையில் ஏர் இந்தியா நிறுவனம் திருத்தம் கொண்டுவந்துள்ளது. ஜனவரி 19ம் தேதி மாற்றப்பட்ட புதிய விதிகளின்படி, ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் தாங்களாக கொண்டுவரும் மதுவகைகளை விமானத்துக்குள் அருந்தக்கூடாது.

இதேபோல் மதுவகைகளை விமான பணியாளர்கள் மட்டுமே பயணிக்கு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மது அருந்திவிட்டு விமானத்திற்குள் ஏறும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்றும், மது அருந்திய பயணியை பச்சை,மஞ்சள், சிவப்பு என்று மூன்று பிரிவுகளாக மதிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏறிய பயணி கூடுதலாக மதுவகைகளை கேட்டால் பணியாளர்கள் தரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மது அருந்திய பயணிகளிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவும், மதுபோதையில் இருக்கும் நபர் குரலை உயர்த்தி பேசினாலும் அவரிடம் நிதானமாக பேசவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள விதிகளை பின்பற்றியே இத்தகைய கொள்கைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டதாக ஏர்இந்தியா தெரிவித்துள்ளது.

First published:

Tags: Air India, Alcohol