• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஏர் இந்தியா விமானம் விபத்து: முதல்கட்ட தகவல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது?

ஏர் இந்தியா விமானம் விபத்து: முதல்கட்ட தகவல் அறிக்கையில் என்ன சொல்லப்பட்டது?

கேரளா விமான விபத்து

கேரளா விமான விபத்து

கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு முதல்கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விமானம் விலகிச்சென்றதே கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணம் என்று முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    வந்தே பாரத் திட்டத்தில் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு இந்தியர்களை அழைத்துவந்த ஏர் இந்தியா விமானம் கடந்த வெள்ளியன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. இதில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து முதல்கட்ட ஆய்வுகளின் அடிப்படையில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு அறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

    Also read: அமெரிக்காவில் சொகுசுக் கப்பலில் பணிபுரிந்த தமிழர் கொரோனாவால் வேலையிழப்பு - மனம் தளராமல் கரும்புச் சாறு விற்பனை

    அதில் விமானம் தரையிறங்க 28வது ஓடுதளம் ஒதுக்கப்பட்டதாகவும், கடைசி நேரத்தில் 10,000 அடி உயரம் பறந்து பின்னர் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு அனுமதி கிடைத்ததும் விமானி தரையிறங்க முயற்சித்ததாகவும் அப்படி தரையிறங்க முற்படும்போது ஓடுபாதையை விட்டு விமானம் விலகிச்சென்றதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில் மீட்கப்பட்ட விமானத்தின் கறுப்புப் பெட்டி டெல்லியில் உள்ள விமான போக்குவரத்து இயக்குநரக அலுவலகத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விபத்து நடந்தது பன்னாட்டு விமான சேவை என்பதால் பன்னாட்டு அதிகாரிகள் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்படும் விசாரணைக்கு பன்னாட்டு அதிகாரிகளின் உதவியை வரவேற்பதாகவும் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரி அனில் குமார் தெரிவித்துள்ளார். இதனிடையே விபத்தில் உயிரிழந்ததில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: