ஆப்கானிஸ்தானில் இருந்து 129 இந்திய பயணிகளுடன் டெல்லி வந்தடைந்தது ஏர் இந்தியா விமானம்

மாதிரிப் படம்

ஆப்கானிஸ்தானின் காபூலிலிருந்து 129 இந்தியப் பணிகளுடன் ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது.

  • Share this:
    அமெரிக்க படைகள் வெளியேற்றத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது. ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 1000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. தலிபான்களை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் திணறி வருகின்றன. தலிபான்களோ முக்கிய நகரங்களை கைப்பற்றி முன்னேறி வருகின்றனர்.

    தலிபான்கள் வசம் ஆப்கானின் பெரும்பகுதி சென்றுவிட்ட நிலையில், இதில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது பெண்கள்தான். தாலிபான்கள் மிக விரைவாக ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினர். ந்தூஸ், தலுகான், நிம்ருஸ், செபர்கான், சாரஞ், சமங்கன், புல்-இ-கும்ரி, தக்கார் உட்பட 10 மாகாணங்களின் தலைநகரங்களை கைப்பற்றிய தலிபான் அமைப்பினர் அதனை தொடர்ந்து கந்தகாரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இன்று காலை ஜலாலாபாத் நகரையும் தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். எவ்வித தாக்குதலும் நடத்தாமலேயே ஜலாலாபாத்தை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், காபூலை தாலிபான்கள் சூழ்ந்துள்ள நிலையில் ஆட்சியை ஒப்படைக்க அரசு தயாராகிவிட்டது. இதற்கிடையில், ஆப்கானிஸ்தானிலுள்ள தங்கள் நாட்டினரை மீட்பதற்கு எல்லா நாடுகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய தூதரகத்தை மூடிவருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவும் தூதரகத்தை மூடுவதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள இந்தியர்களை தாயகம் கொண்டுவதற்காக இன்று புறப்பட்ட ஏர் இந்திய விமானம் ஏஐ-243-யால் காபூலுக்குச் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக தாமதத்துக்குப் பிறகு, அசாதாரண சூழலுக்கு மத்தியில் காபூலில் பத்திரமாக விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து 129 பயணிகளுடன் மாலை 6 மணிக்கு புறப்பட்ட விமானம், 8 மணிக்கு முன்னதாக டெல்லியில் பத்திரமாக தரையிறங்கியது.
    Published by:Karthick S
    First published: