வௌவால் காரணமாக நடுவழியிலேயே திரும்பிய ஏர் இந்தியா விமானம்!

கோப்புப் படம்

ஏர் இந்திய விமானம் நியூவார்க் சென்றுகொண்டிருந்தபோது, அதன் பிஸ்னஸ் கிளாஸ் பிரிவில் வௌவால் கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. இருக்கை எண் 8DEF-இல் இருந்து வௌவாலின் சடலம் கைப்பற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது

  • Share this:
    டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில்  வௌவால் இருந்ததால் விமானம் அவசரமாக மீண்டும் டெல்லியிலேயே தரையிறக்கப்பட்டது.

    டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்காவில் உள்ள நியூவார்க் சர்வதே விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது.  நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் வௌவால் இருப்பதை  தெரியவந்தது. இதையடுத்து, விமானத்தை மீண்டும் டெல்லியில் தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

    இதையடுத்து, டெல்லி திரும்பிய விமான, அதிகாலை 3.55 மணியளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் , வனவிலங்கு ஊழியர் வரவழைக்கப்பட்டு விமானத்தில் இருந்த வௌவால் அகற்றப்பட்டது. அதன் பின்னர்  விமானம் மீண்டும் புறப்பட்டு சென்றது.

    இது தொடர்பாக விமான இயக்குநரக அதிகாரிகள்  கூறுகையில்,
    ஏர் இந்தியாவின்  B777-300ER விமானம் நியூவார்க் சென்றுகொண்டிருந்தபோது, அதன் பிஸ்னஸ் கிளாஸ் பிரிவில் வௌவால் கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறக்கப்பட்டது. இருக்கை எண் 8DEF-இல் இருந்து வௌவாலின் சடலம் கைப்பற்றப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து விமானம் தூய்மைப்படுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் படிக்க..  வங்க தேசப் பெண்ணுக்கு இந்தியாவில் நடந்த கொடுமை..

    விரிவான விசாரணைக்காக இந்த சம்பவம் குறித்து  விமான பாதுகாப்பு துறைக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு ஏற்றி வரும் வாகனம் போன்றவை மூலம் வௌவால் விமானத்திற்குள் வந்திருக்கலாம்  என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் காரணமாக பயணிகள் வேறு விமானம் மூலம் நியூவார்க் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Must read... தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு..



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Murugesh M
    First published: