விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது மின்சார கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தோஹாவில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை நெருங்கியது. இதனையடுத்து தரையிறங்குவதற்காக ஓடுபாதையில் இறங்கிய போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையின் ஓரத்திற்கு சென்றது. சென்ற வேகத்தில் அங்கிருந்த வழிகாட்டு விளக்குகள் இருந்த மின் கம்பம் ஒன்றின் மீது விமானத்தின் இறக்கை மோதியது.
இதில் மின் கம்பம் சாய்ந்த நிலையில் விமானத்தின் இறக்கை லேசாக சேதமடைந்தது, இருப்பினும் சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தை தொடர்ந்து நகராமல் லாவகமாக நிறுத்தினார்.
இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகளும் விமான சிப்பந்திகளும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர். விமானம் ஓடுபாதையை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதிய விவகாரம் விஜயவாடா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே விமானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என விமான நிலைய இயக்குனர் ஜி.மதுசூதனன் ராவ் செய்தியாளர்களிடையே தெரிவித்தார்.
ஷார்ஜாவில் இருந்து கோழிக்கோட்டிற்கு 112 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் விமானத்தை நேற்று அவசரமாக தரையிறக்கினர். இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த நாளிலேயே விஜயவாடா விமான நிலையத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Minor mishap to Air India flight at Gannavaram Airport, Vijayawada, Andhra today evening. The flight from Abu Dhabi rammed into an electric pole next to the runway, causing damage to flight wing. All 63 passengers on board& crew are safe! @airindiain#FlightAccident 🙏🏼 #AllSafepic.twitter.com/NpcZ21Qx5e
நேற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தான் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு கோழிக்கோடு விமான நிலையத்தில் துபாய் நாட்டில் இருந்து வந்த விமான நிலையம் ஓடுபாதையை விட்டு விலகி அங்கிருந்த பள்ளத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இரண்டு துண்டுகளான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 19 பயணிகள் உயிரிழந்தனர்
கோழிக்கோடு விமான விபத்திற்கு பிறகு தற்போது நடைபெற்றிருப்பது 3வது விபத்தாகும். இது விமான பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதெ நேரத்தில் இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Arun
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.