Home /News /national /

நாங்க ரொம்ப ஸ்ட்ரிட்; ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் அதிரடி உத்தரவு

நாங்க ரொம்ப ஸ்ட்ரிட்; ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

Air India : ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் பணியாற்றும் பெண்கள் அதிக அளவில் நகைகள் அணிய வேண்டாம் என உழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா கிட்டதட்ட 69 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டாடா குழுமத்திடம் வந்துள்ளது. 1932ம் ஆண்டு ஜேஆர்டி டாடாவால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ் நிறுவனமே 1946ம் ஆண்டு ஏர் இந்தியாவாக மாற்றப்பட்டது. இந்நிறுவனம் 1953ம் ஆண்டு தேசியமாயக்கப்பட்ட நிலையில், டாடா குழுமத்துடனான பந்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை காரணமாக மத்திய அரசு பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்க முடிவெடுத்து, இதற்கான ஏலமும் நடைபெற்றது. அதில் 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கியது. இதனையடுத்து கடந்த 8ம் தேதி அனைத்து விதமான ஆவண பரிமாற்றங்களும் நிறைவு பெற்று, டாடா சன்ஸ் நிறுவனத்திடம் ஏர் இந்தியாவை மத்திய அரசு ஒப்படைத்தது.

ஏர் இந்தியா நிறுவனம் தங்களிடம் மீண்டும் வந்துள்ளதால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ள டாடா குழுமம், பயணிகளுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் முதற்கட்டமாக தனது ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. டாடா குழுமம் சார்பில் ஏர் இந்தியா விமான ஊழியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டுள்ளது.

இதுவும் படியுங்கள் :  காதலர்கள் தினம் கொண்டாட்டம்: புதுச்சேரி கடற்கரையில் காதலர்களிடம் தீவிர விசாரணை செய்த போலீசார்

அதில், கேபின் பணியாளர்கள் அதிகமாக நகை அணிந்து வர வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகமாக நகை அணிந்து வருவதால், செக்யூரிட்டி பரிசோதனைகளின் போது அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டி வரும் என்பதால் அதனை தவிர்க்கும் படி டாடா குழுமம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பணி நேரத்தில் விமான நிலையங்களில் உள்ள டூட்டி ப்ரீ எனப்படும் வரி இல்லாத பொருட்கள் விற்பனை கடைகளுக்குச் செல்வதை பணியாளர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், சுங்கத்துறை மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளை விரைவாக முடித்துக்கொண்டு விமானத்தில் ஏறுவதற்கான நுழைவாயிலை விரைவில் வந்தடையவும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவும் படியுங்கள் : காங்கிரஸ் கட்சியை ராகுலும், பிரியங்காவுமே தோற்கடித்து விடுவார்கள்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு

அதேபோல் கேபின் பணியாளர்கள் உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை குறித்து பரிசோதனை செய்யப்படும் என்றும் ஸ்டிரிக்ட் உத்தரவு போடப்பட்டுள்ளது. அதேபோல் உணவு அருந்துவது, குளிர்பானம் குடிப்பது போன்ற செயல்களை பயணிகள் விமானத்தில் ஏறும் போதும் செய்யக்கூடாது என்றும், அவர்களுக்கான இருக்கையை காண்பித்து அமரவைப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே விமானப் பயணிகளுக்கு சேவை வழங்குவதிலும், சரியான நேரத்தில் புறப்பட்டுச் செல்வதும் தரையிறங்குவதும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. எனவே ஏர் இந்தியாவை வழிநடத்த உள்ள டாடா குழுமம் முதலில் ஊழியர்கள் தாமதமாக வருவதை தடுப்பதற்கான வழிவகைகளை கண்டறிந்து, அதனை தவிர்ப்பதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Air India

அடுத்த செய்தி