விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியில் இருப்பது என்ன...?

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்

கோழிக்கோடு விமான நிலையத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை என சர்ச்சைகள் தொடர்ந்துவரும் நிலையில், மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது. விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் கருப்பு பெட்டி, டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டுவருகிறது.

  இது தொழில்நுட்ப கோளாறா அல்லது மனித தவறால் நிகழ்ந்ததாக என தற்போது முடிவுக்கு வர முடியாது எனக் கூறும் அதிகாரிகள், போயிங் நிறுவனத்திடமும் பேச உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஓடுபாதை தேர்வு, அடுத்தடுத்த காற்றின் திசையில் கடைசி நிமிட மாற்றம், விமானத்தின் தரையிறங்கும் கியரில் சிக்கல் என உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நிபுணர்கள் ஆய்வு செய்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்க அனுமதி கிடைத்த பிறகு விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேறியதாக முதற்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கோழிக்கோடு விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றால் கட்டாய பாதுகாப்பு தணிக்கை நடத்தப்படவில்லை எனக் கூறி 4 ஆண்டுகளுக்கு முன்பு கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

  இந்திய விமான நிலையங்கள் ஒழுங்குமுறை ஆணையம் இந்த விமான நிலையத்தை விரிவுபடுத்த 485 ஏக்கர் நிலம் கேட்ட நிலையில், மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், விரிவுபடுத்தும் திட்டம் 137 ஏக்கருக்கு குறைக்கப்பட்டது. ஆனால் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் நிலம் கையகப்படுத்தும் பணி 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளன.

  இது போன்று சர்ச்சைகளுக்கு மத்தியில் விமான நிலையம் இயங்கிவரும் நிலையில், இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளதாக மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக அவர் அளித்த தகவலில், விபத்துக்கான காரணம் குறித்த முதற்கட்ட விசாரணை நாளை நிறைவடையும் எனக் கூறினார்.

   

  https://twitter.com/ImtiazMadmood/status/1292410580297539584

  https://twitter.com/ShashiTharoor/status/1292033469028036609

  https://twitter.com/capt_ivane/status/1291946995196653569

  இந்த விபத்திற்கு பிறகு, விமான ஓடுதளத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற குரல்கள் அதிகம் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.
  Published by:Sankar
  First published: