முகப்பு /செய்தி /இந்தியா / “உலக பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு காண முடியும்” - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சு

“உலக பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு காண முடியும்” - பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பேச்சு

பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான்

பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான்

உடான் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் விமான சேவை விரிவுப்படுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

பிரான்ஸை சேர்ந்த ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களை வாங்க, ஏர் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த ஒப்பந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய மோடி, இந்த ஒப்பந்தம் வாயிலாக இந்தியா-பிரான்ஸ் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்றார். உடான் திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் விமான சேவை விரிவுப்படுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் நாட்டு மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததாக மோடி கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் சுகாதாரத்தில், இருநாடுகளும் சிறந்த பங்களிப்பை வழங்குவதாக இமானுவேல் மேக்ரானிடம் பிரதமர் மோடி தெரிவித்தார். உலகில் தற்போது சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னைகளுக்கு மோடியால் தீர்வு காண முடியும் என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், டாடா நிறுவனத்தின் தலைவர் நடராஜன் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்களை ஏர் இந்தியா வாங்கியது. இதனை தொடர்ந்து சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஏர் பஸ் நிறுவனத்திடம் விமானம் வாங்க ஏர் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Air India, France, French President Emmanuel Macron, PM Modi