வெளிநாட்டுப் பயணம்: மோடியை விட ரூ.50 கோடி அதிகம் செலவு செய்த மன்மோகன் சிங்?

மன்மோகன் சிங்கை விட அதிக வெளிநாட்டுப் பயணங்கள் சென்ற பிரதமர் மோடி.

news18
Updated: April 8, 2019, 7:52 PM IST
வெளிநாட்டுப் பயணம்: மோடியை விட ரூ.50 கோடி அதிகம் செலவு செய்த மன்மோகன் சிங்?
மோடி, ஏர் இந்தியா
news18
Updated: April 8, 2019, 7:52 PM IST
பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்தது முதல் தற்போது வரை 443.4 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக ஏர் இந்தியா மத்திய அரசுக்கு பில் அனுப்பியுள்ளது.

2014-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வந்தது முதல் பிரதமர் இந்தியாவிலிருந்ததை விட வெளிநாடுகளில் தான் அதிகம் இருந்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்தன.

எதிர்க்கட்சிகளின் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் மத்திய அரசு, பிரதமர் மோடி செய்யும் வெளிநாட்டுப் பயணங்களால் இந்தியாவிற்கு புதிய தொழில் வாய்ப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர்.

நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற முதல் ஆண்டிலேயே 20 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக 37.22 கோடி ரூபாயை அரசு செலவிட்டுள்ளது.

தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் முடிவுக்கு வந்து, நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி ஏர் இந்தியா விமானத்தில் மொத்தமாக 44 நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இதற்கு 443.4 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என்று ஏர் இந்தியா பில் அனுப்பியுள்ளது.

மேலும், 2009 முதல் 2014 காலகட்டத்தில் யூபிஏவின் இரண்டாவது 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, 5 ஆண்டுகளில் 38 நாடுகளுக்கு வெளிநாட்டுப் பயணங்களை செய்துள்ளார். இதற்கு அப்போது அரசு செய்த செலவு 493 கோடி ரூபாய் என்று தரவுகள் கூறுகின்றன.

மன்மோகன் சிங்கை விட அதிக வெளிநாட்டுப் பயணங்களைப் பிரதமர் மோடி செய்திருந்த போதிலும் எப்படி 50 கோடி ரூபாய் செலவு குறைந்தது என்று பார்த்தால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டதே காரணம் என்று கூறப்படுகிறது.
Loading...
மேலே கூறிய வெளிநாட்டுப் பயணங்கள் மட்டுமல்லாமல் பிரதமர் மோடி சிங்கப்பூர், ஈரான் போன்ற மேலும் 6 நாடுகளுக்கு ஏர் ஃபோர்ஸூக்கு சொந்தமான போயிங் 737 பிஸ்னஸ் ஜெட் விமானத்தில் வெளிநாட்டுப் பயணங்களைச் செய்துள்ளார். இந்தப் பயணங்களுக்கு எவ்வளவு செலவானது என்ற விவரங்களை அரசு இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க:





தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்

POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626