முதல் அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை பெற்றது இந்தியா!

எல்லா வானிலை நிலையிலும் பறக்கும் திறன் கொண்ட அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் என்று கூறப்படுகிறது.

முதல் அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை பெற்றது இந்தியா!
அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்
  • News18
  • Last Updated: May 11, 2019, 12:46 PM IST
  • Share this:
அமெரிக்கா உடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய விமானப்படைக்காக அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையை நவீனப்படுத்தும் விதமாக மேம்பட்ட வசதிகள் கொண்ட அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டரை வாங்க 2015-ம் ஆண்டு அமெரிக்கா உடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து பரிசோதனைகள் முடிந்த நிலையில், முதல் ஹெலிகாப்டர் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவின் அரிசோனாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையிடம் ஹெலிகாப்டர் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏர் மார்ஷல் ஏ.எஸ் படோலா கலந்து கொண்டார்.எல்லா வானிலை நிலையிலும் பறக்கும் திறன் கொண்ட அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படைக்கு வலுசேர்க்கும் என்று கூறப்படுகிறது.

மூன்று விமானிகள் கொண்ட குழு இந்த ஹெலிகாப்டரை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: May 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...