Home /News /national /

Helicopter Crash: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் - உறுதிப்படுத்திய விமானப்படை

Helicopter Crash: விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் - உறுதிப்படுத்திய விமானப்படை

இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், இன்று மதியம் தமிழகத்தின் குன்னூர் பகுதியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. பிபின் ராவத்தின் மறைவு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Coonoor Helicopter Crash: முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூரில் விபத்தில் சிக்கிய தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

    குன்னூர் அருகே ராணுவ வீரர்களுடன் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் அதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்புத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி உட்பட 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

    IAF

    இதனிடையே ஹெலிகாப்டர் விழுந்ததில் அதில் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் 4 ராணுவ வீரர்கள் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிகளுக்காக தீயணைப்புத்துறையினர் உள்ளிட்டோர் விரைந்துள்ளனர்.

    இதனிடையே விபத்துக்குள்ளான  ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத்தும், அவரின் குடும்பத்தினரும் பயணித்ததாக கூறப்பட்ட தகவலை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தியிருக்கிறது. பிபின் ராவத்தின் நிலை என்ன ஆனது என்பது குறித்து உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.

    ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய இடத்தில் பொதுமக்கள் சிலர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். சிலரை படுகாயத்துடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    விபத்துக்கான காரணம் தெரியாமல் உள்ளது. முப்படைகளின் தலிமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் குன்னூரில் விபத்தில் சிக்கிய தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

    Published by:Arun
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat, Coonoor Constituency, Helicopter Crash, Indian army

    அடுத்த செய்தி