முகப்பு /செய்தி /இந்தியா / 50 லட்சம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கும் பிரபல விமான நிறுவனம் - செப்டம்பர் 25 வரை மட்டுமே இந்த ஸ்பெஷல் ஆஃபர்.!

50 லட்சம் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கும் பிரபல விமான நிறுவனம் - செப்டம்பர் 25 வரை மட்டுமே இந்த ஸ்பெஷல் ஆஃபர்.!

ஏர் ஏசியா

ஏர் ஏசியா

Air Asia Free Ticket Offer | உங்கள் பயணத்தை நீங்கள் விமானத்தில் இலவசமாக மேற்கொள்ளலாம். ஆம் நீங்கள் படிப்பது உண்மை தான்...

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா பயணிகள் இலவசமாக விமான பயணம் மேற்கொள்ளும் வகையில் ஒரு நல்ல சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ், ஏர் ஏசியா நிறுவனம் சுமார் 50 லட்சம் சீட்களுக்கான (இலவச உள்நாட்டு மற்றும் சர்வதேச) இலவச டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. இந்த இலவச டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது. ஏர் ஏசியா வழங்கும் இந்த அற்புத சலுகையின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்...

உண்மையில் ஏர் ஏசியா நிறுவனம் தனது பெரிய மறுபிரவேசத்தை கொண்டாடுகிறது. கோவிட் காரணமாக விமான நிறுவனங்கள் பல மாதங்களாக நஷ்டத்தில் இருந்தன. ஆனால் இப்போது கோவிட் தொற்று குறைந்து நிலைமை சிறப்பாக இருப்பதால், மக்கள் அதிகம் பயணம் செய்ய விரும்புகிறார்கள். எனவே பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை விமான நிறுவனங்கள் தற்போது அடைந்து வருகின்றன. இந்த சூழலில் தான் ஏர் ஏசியா நிறுவனம் 5 மில்லியன் அதாவது 50 லட்சம் இலவச சீட்களுக்கான டிக்கெட்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி உள்ள இதற்கான முன்பதிவு செப்டம்பர் 25-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எத்தனை நாட்களுக்குள் பயணம் செய்யலாம்.?

பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் ஏசியா நிறுவனத்தின் வெப்சைட்டில் கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த சிறந்த சலுகையின் கீழ் செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 25 வரை முன்பதிவு செய்தால், அடுத்த ஆண்டு அதாவது ஜனவரி 1, 2023 முதல் அக்டோபர் 28, 2023 வரை பயணிக்க முடியும். எனவே, ஜனவரி 1, 2023 முதல் அக்டோபர் 28, 2023 வரை பயணம் செய்யத் திட்டமிடும் பயணிகள், இந்தச் சலுகையை இலவசமாகப் பெறலாம்.

எப்படி புக் செய்வது.?

ஏர் ஏசியா நிறுவனத்தின் 50 lakh FREE seats Sale ஆஃபர் நிறுவனத்தின் வெப்சைட் மற்றும் App-ல் கிடைக்கிறது. இலவச டிக்கெட்டுகளைப் பெற பயணிகள் AirAsia Super ஆப் அல்லது வெப்சைட்டில் உள்ள flight ஐகானை கிளிக் செய்து தேதிகளைத் தேர்வு செய்ய வேண்டும். லங்காவி, பினாங்கு, ஜோகூர் பாரு, கிராபி, ஃபூ குவோக் மற்றும் சிங்கப்பூர் உட்பட ஆசியா முழுவதும் உள்ள பல பிரபலமான உள்நாட்டு மற்றும் சர்வதேச இடங்களுக்கு இலவச சீட்கள் கிடைக்கின்றன மற்றும் பல வழித்தடங்களிலும் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Also Read : பண்டிகை காலத்தில் தட்கல் டிக்கெட்டை IRCTC மூலம் எளிதாக புக் செய்வது எப்படி?

இந்த சலுகையில் கீழ் புக்கிங் செய்யும் இலவச டிக்கெட்களை வேறு யாருக்கும் மாற்ற முடியாது என்பதையும், அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பயன்படுத்த வேண்டும் என்பதையும் பயணிகள் நினைவில் கொள்ள வேண்டும். இந்த சிறப்பு சலுகை தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள ஏர் ஏசியாவின் குழுமத் தலைமை வணிக அதிகாரி கரேன் சான், உலகெங்கிலும் உள்ள எல்லைகள் படிப்படியாக மீண்டும் திறக்கப்படுவதை கொண்டாட மற்றும் நிறுவனத்தின் ஆண்டுவிழாவை கொண்டாட என இரட்டை காரணங்களுக்காக இந்த கூடுதல் சிறப்பு விற்பனை சேர்க்கப்பட்டுள்ளது. எங்கள் சிறப்பு விற்பனையைப் பயன்படுத்தி பயனடையுமாறு பயணிகளை கேட்டு கொள்கிறோம் என்றார்.

First published:

Tags: Air Asia, Flight travel