அயோத்தி வழக்கில் மேல்முறையீடு! இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு

"கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மசூதி எங்களுக்கு வழங்கப்படவில்லை"

அயோத்தி வழக்கில் மேல்முறையீடு! இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் அறிவிப்பு
  • News18
  • Last Updated: November 17, 2019, 3:42 PM IST
  • Share this:
அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று அனைத்திந்திய இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்திலிருந்து சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம்லாலாவுக்கே சொந்தம். அதில், ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகள் லக்னோவில் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜமாய்த் உலாமா -ஐ- ஹிந்த் அமைப்பின் தலைவர் அர்ஷத் மதானி, ‘கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும், மசூதி எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதனால், நாங்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளோம். எங்களுக்கு என்ன உரிமை இருந்தது என்று கேட்கவுள்ளோம்.


மவுலானா அர்ஷத் மதானி


எங்களுடைய மனு 100% தள்ளுபடி செய்யப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், நாங்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவுள்ளோம். எங்களுக்கு அந்த உரிமை உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். அனைத்திந்திய இஸ்லாமியர்கள் தனிநபர் சட்டவாரியம் சார்பில் இந்த வழக்கு தொடரப்படவுள்ளது.

Also see:

 
First published: November 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்