Home /News /national /

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்க முடிவு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தில் இறங்க முடிவு!

எய்ம்ஸ் மருத்துவமனை  (கோப்புப் படம்)

எய்ம்ஸ் மருத்துவமனை (கோப்புப் படம்)

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் தங்களின் எதிர்ப்பை உரிய வகையில் வெளிப்படுத்துவோம் என்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

  • News18
  • Last Updated :
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்த நிலையில், இன்று பிற்பகல் முதல் நாளை காலைவரை அடையாளப் போராட்டம் நடத்த உள்ளதாக கூறியுள்ளனர்.

மேற்குவங்கத்தில் அரசு மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து அங்குள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

ஆனால், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வழக்கம் போல் இயங்கும் என்றும், சிகிச்சை அளிப்பதில் எந்த இடையூறும் ஏற்படாது என அறிக்கை வெளியிடப்பட்டது. நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை


இருந்த போதும், தங்களின் எதிர்ப்பை உரிய வகையில் வெளிப்படுத்துவோம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று பகல் 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

Also see... கீரை விவசாயத்தில் நிரந்தர வருமானம் ஈட்டும் பெண் விவசாயி!





உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Published by:Vaijayanthi S
First published:

Tags: AIIMS Hospital, Doctors Strike

அடுத்த செய்தி