கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய தளத்தில் திடீரென வைரஸ் தாக்குதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அந்த சர்வர் ஹேக் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளத்தை ஹேக் செய்துள்ளதாகவும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி அளித்தால் மட்டுமே அந்த இணையதளத்தை பாதுகாக்க முடியும் என்றும் மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணையதளமும் ஹேக் செய்யப்பட்டுள்ளதால் இண்டர்நெட் சேவை முடங்கி நோயாளிகள் தொடர்பான தகவல்களை பயன்படுத்த முடியாமல் மருத்துவர்கள் திணறினர். நாட்டின் முதல் குடிமகன் முதல் சாமானியன் வரை அனைவருக்கும் உலகத் தரம் வாய்ந்த மருத்துவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், பிரதிநிதிகள், நீதிபதிகள் உட்பட நாட்டின் குடிமக்களில் சுமார் மூன்று முதல் நான்கு கோடி மக்களின் தரவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வர் ஹேக் செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததும், Computer Emergency Response Team எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. மீட்பு நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு நடுவில், எய்ம்ஸ் மருத்துவமையில் உள்ள 5,000 கணினிகளில் 1,200 கணினிகளுக்கு வைரஸ் அட்டாக் செய்யப்படாமல் இருக்க ஆண்டி-வைரஸ்கள் போடப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியால் என்ஐசி இ-மருத்துவமனை தரவுத்தளம் மற்றும் இ-மருத்துவமனைக்கான பயன்பாட்டு சேவையகங்கள் மீட்டமைக்கப்பட்டுள்ளன. என்ஐசி குழு, எய்ம்ஸ் மருத்துவமனையில் அமைந்துள்ள மற்ற இ-மருத்துவமனை சர்வர்களில் இருந்து வைரஸ்களை ஸ்கேன் செய்து சுத்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் - தெலங்கானா முதலமைச்சர் மகளுக்கு சிபிஐ நோட்டீஸ்
முதல்கட்ட விசாரணையில் எய்ம்ஸ் மருத்துவமனை மீதான சைபர் தாக்குதலுக்கு சீனாவைச் சேர்ந்த சிலர் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இது குறித்த உளவுத்றை அளித்த தகவல்களின் அடிப்படையில் சீனாவை மையமாக கொண்டு இயங்கும் குழு ஒன்று இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
அதிக கோடீஸ்வரர்களை இழக்கும் முதல் 3 நாடுகளின் பட்டியலில் இடம்பெற்ற இந்தியா!
மேலும், ஹேக்கர்கள் கேட்ட 200 கோடி கிரிப்டோ கரன்சி கொடுக்கப்படாததால் திருடப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் தகவல்கள் பிளாக் வெப்சைட்டில் விறபனைக்காக பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்கிற அச்சத்தையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.