இந்தியாவில் கொரோனா அதிகரிப்பது ஏன்? எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கம்

ரந்தீப் குலேரியா

மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் விழாக்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும்.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதற்கு உரிய காரணங்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா விவரித்து, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் மேசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நோயால் பாதிக்க படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவல் கடந்த மாதத்தில் வெகுவாக குறைந்து வந்தது. இதனால், வைரஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக நினைத்து மக்கள் மலைப் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றிற்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.

    ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் திடீரென அதிகரித்தது. வழக்கமாக கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்று வாரங்களுக்குப் பிறகே தெரியவரும். அதன்படி தற்போது நாடு முழுதும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    முககவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே தற்போதைய இந்த திடீர் பரவலுக்குக் காரணம். எனவே தான், மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள் விழாக்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம்.

    இந்த ஆண்டு இறுதிக்குள் 108 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்குவது என்ற மத்திய அரசின் இலக்கு தற்போதும் சாத்தியமே. பல புதிய தடுப்பூசிகள் கிடைக்க இருப்பதால், இந்த இலக்கை நம்மால் எட்ட முடியும். தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதமாக இருக்கிறது. அதனால் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

    Read More : கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: தமிழக அரசு அதிரடி உத்தரவு!

    இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் வழங்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இது அவசியமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. உலகம் முழுதும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும். சீனாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கே தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது” இவ்வாறு கூறினார் குலேரியா.

    Must Read : அதிகரிக்கும் கொரோனா: பேரழிவு ஏற்பட்டுவிடும் -தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

    இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதக 41 ஆயிரத்து 831 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,16,55,824 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 541 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,351 ஆக அதிகரித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 39,258 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,20,521 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் குணமடைவோர் விகிதம் 97.36 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்கு தற்போது 4,10,952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது 1.30 சதவீதமாக இருக்கிறது.

    நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 40 கோடியே 2 லட்சத்து 98 ஆயிரத்து 596 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: