Home /News /national /

புதுச்சேரியிலும் வலுப்பெறும் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்

புதுச்சேரியிலும் வலுப்பெறும் அதிமுக ஒற்றை தலைமை விவகாரம்

புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள்

புதுச்சேரி அதிமுக நிர்வாகிகள்

Puducherry ADMK : தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஒற்றை தலைமை விவகாரம் அதிமுக நிர்வாகிகளிடையே வலப்பெற்று வருகிறது. கிழக்கு-மேற்கு பிரிவினை கடந்து கழக நிர்வாகிகள் கை கேர்த்து வருகின்றனர்.

புதுச்சேரியில் கிழக்கு மாநிலம், மேற்கு மாநிலம் என பிரிந்துள்ள அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றாக இணைய வேண்டும் என விரும்பி மேற்கு மாநில நிர்வாகிகள் 21 பேரில் 11 பேர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். அவர்களை முன்னாள் மாநில செயலாளர் நடராஜன் தலைமையில் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் கிழக்கு மாநில செயலாளர் அன்பழகனை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அப்போது, அவர்களை வரவேற்று பேசிய அன்பழகன், தமிழகத்திலிருந்து அதிமுகவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் மு.க.ஸ்டாலினின் ஒரே அஜெண்டா. இதற்கு ஓபிஎஸ் துணை போகிறார். அவர் நமது கட்சியில் இருக்கக்கூடாது. அதனால்தான் இந்த நடவடிக்கையில் நாம் இறங்கி உள்ளோம்.

இதனால்தான் மேற்கு பகுதியிலிருந்து வரும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம். நிச்சயமாக வரும் 11ஆம் தேதி கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். ஒற்றை தலைமையில்தான் இனி தமிழகம்-புதுச்சேரியில் அதிமுக இயங்கும்.

ஜெயலலிதா வகித்த பதவிக்கு எடப்பாடியார் வருவார் என்றார். காலுக்கு கீழ் உள்ள தொண்டனை மதிக்கும் ஒரே பண்பு கட்சி தலைவருக்கு இருக்க வேண்டும்.  அந்த பண்பு உள்ள ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமி தான்.  அதிமுக என்பது ஒரு குடும்பம் அதில் யார் வந்தாலும் அரவணைத்து அழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Must Read : நீ என்ன ஜெயக்குமார் ஆளா எனக் கூறி அதிமுக தொண்டர் வாயில் குத்து.. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு

அதிமுக அன்பழகன், புதுச்சேரி


புரட்சித் தலைவர் வாழ்க, புரட்சித் தலைவி வாழ்க, எடப்பாடி பழனிசாமி வாழ்க என்று கூறுபவர்கள் மட்டும் நம் பக்கம் வாருங்கள். ஒற்றைத் தலைமை வேண்டாம்; இரட்டைத்தலைமைதான் வேண்டும் என்பவர்கள் திமுகவுக்கு போய்விடுங்கள். அடுத்து தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் அதிமுக அரசு அமையும் போது, புதுச்சேரியிலும் அதிமுக அரசு அமையும் என்றும் அன்பழகன் பேசினார்.
Published by:Suresh V
First published:

Tags: ADMK, EPS, OPS, Puducherry

அடுத்த செய்தி