Home /News /national /

அசாம் மருத்துவமனையில் Covid-19 நோயாளிகளுக்கு சேவை செய்யும் ரோபோக்கள்!

அசாம் மருத்துவமனையில் Covid-19 நோயாளிகளுக்கு சேவை செய்யும் ரோபோக்கள்!

 Covid நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் சனிக்கிழமை திப்ருகரைச் சேர்ந்த அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சஞ்சிப் ககாட்டிக்கு (Sanjib Kakati) இரண்டு ரோபோக்களை வழங்கினார். 

Covid நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் சனிக்கிழமை திப்ருகரைச் சேர்ந்த அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சஞ்சிப் ககாட்டிக்கு (Sanjib Kakati) இரண்டு ரோபோக்களை வழங்கினார். 

Covid நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் சனிக்கிழமை திப்ருகரைச் சேர்ந்த அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சஞ்சிப் ககாட்டிக்கு (Sanjib Kakati) இரண்டு ரோபோக்களை வழங்கினார். 

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
அசாமில் உள்ள ஒரு மருத்துவமனையில் Covid-19 நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை மனிதர்களுக்கு பதில் இனிமேல் ரோபோக்கள் (Robots) வழங்கும் என்று அரசு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். தொலைதூர கட்டுப்பாட்டு ரோபோ வாகனங்களை (remote controllable robotic vehicles) குவஹாத்தியை (Guwahati) தளமாகக் கொண்ட யந்திரபோட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் (Yantrabot Technologies Pvt Limited) வடிவமைத்துள்ளது.

இந்த ரோபோக்கள் கோவிட் -19 நோயாளிகளுக்கும், தனிமைப்படுத்தப்பட்ட அறைகளுக்குள் அதிக தொற்றுள்ள நோயாளிகளுக்கும் உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்கும். Covid நோயாளிகளுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக அஸ்ஸாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் (Chief Minister Sarbananda Sonowal) சனிக்கிழமை திப்ருகரைச் சேர்ந்த அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (Assam Medical College and Hospital (AMCH)) முதல்வர் சஞ்சிப் ககாட்டிக்கு (Sanjib Kakati) இரண்டு ரோபோக்களை வழங்கினார். 

ரோட்டரி இன்டர்நேஷனலின் ரோட்டரி அறக்கட்டளை (Rotary Foundation of Rotary International), ரோட்டரி கிளப் ஆஃப் திப்ருகார் மற்றும் பங்களாதேஷின் ரோட்டரி கிளப் ஆஃப் டாக்கா ராயல் (Rotary Club of Dibrugarh and Bangladesh's Rotary Club of Dhaka Royal) ஆகியோரால் நிதியளிக்கப்பட்ட Covid-19 உள்கட்டமைப்பு உபகரணங்கள் மானியத்தின் ஒரு பகுதியாக இது உள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

ரோபோவை வடிவமைத்த யந்திரபோட் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அருண்ஜோதி போர்கோஹெய்னுக்கு சோனோவால் (Arunjyoti Borgohain of Yantrabot Technologies Pvt Limited) நன்றி தெரிவித்தார். ஹாஸ்பிட்டலில் உள்ள நோயாளிகளுக்கு கவனிப்பை வழங்குவதில் இரண்டு ரோபோக்களுக்கும் பெரும் பங்கு இருக்கும் என்று முதலமைச்சர் கூறினார். இதற்கிடையில், வடகிழக்கு இந்தியாவில் முதன்முதலில், திரிபுரா பல்கலைக்கழகத்தைச் (Tripura University) சேர்ந்த இளம் விஞ்ஞானி ஹர்ஜீத் நாத் உருவாக்கிய ரோபோ, கோவிட் நோயாளிகளைச் சமாளிக்க 2020 மே மாதம் அரசாங்க கோவிட் பராமரிப்பு மையத்தில் பயன்படுத்தப்பட்டது. 

Also read... Apple Watch, Garmin, Fitbit Trackers மூலம் கொரோனா பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்!

ஸ்க்ராப் உள்ளிட்ட உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களிலிருந்து ரோபோவை நாத் உருவாக்கியுள்ளார். Covid-19 தொற்றுநோய்க்கு எதிரான போரை நடத்துவதற்கு அவர் அதை 'வார்போட்' (WARBOT') என்று பெயரிட்டுள்ளார். கொரோனா வைரஸ் நோயாளிகளை தொலைதூர இடத்திலிருந்து கவனித்துக்கொள்வதில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு உதவுவதே ஹர்ஜீத் நாத்தின் நோக்கம். 

ஜூலை 2020ல் இந்த இளம் விஞ்ஞானி திரிபுரா மருத்துவக் கல்லூரிக்கும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு போதனா மருத்துவமனைக்கும் (Tripura Medical College and Dr B.R. Ambedkar Memorial Teaching Hospital) ரோபோவை நன்கொடையாக வழங்கினார்.  தலைநகர் அகர்தலாவின் புறநகரில் உள்ள ஹப்பானியாவில் 250 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையத்தில் மருத்துவ கல்லூரி, ரோபோவைப் பயன்படுத்தியது. திரிபுரா மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும், ஹப்பானியா கோவிட் பராமரிப்பு மையத்தின் (Hapania Covid Care Centre) பொறுப்பாளருமான ஷிப் சேகர் தத்தா (Shib Sekhar Datta) இந்த ரோபோ பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Covid-19, Robo

அடுத்த செய்தி