குஜராத்தில் உள்ள அகமதாபாத் பெருநகருக்கு அருகில் உள்ள கோட்டா என்ற பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தனது என்.ஆர்.ஐ கணவருக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் துபாயில் வசிக்கும் தன் கணவர் தங்கள் 2 வயது மகளின் வாயில் பீர் பாட்டிலை வைத்து குடிக்குமாறு ஒன்றுமறியா பிஞ்சை கட்டாயப்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கடந்த 1 வருடத்திற்கும் மேலாக தன்னுடன் உடலுறவில் ஈடுபடவில்லை என்றும் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் தன் கணவர் மீது பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ள அந்த பெண் புகார் மனுவில், தான் 2016-இல் திருமணம் செய்து கொண்டதாகவும், 2017 ஆம் ஆண்டில் தனது கணவருடன் துபாய்க்குச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவருடன் வெளிநாட்டில் மகிழ்ச்சியாக வாழலாம் என்று சென்ற தனக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக கூறியுள்ள அப்பெண், துபாயில் ஒன்றாக வசித்த போது தினமும் குடி போதையில் வீடு திரும்பும் கணவர், தன்னையும் பீர் குடிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக கூறி உள்ளார்.
வேண்டாம் என்று கூறி விலகி சென்றாலும் சில நேரங்களில் என்னை விடாமல் துரத்தி வந்து வலுக்கட்டாயமாக பீர் பாட்டிலை என வாயில் திணித்து விடுவார். அது மட்டுமல்லாமல் தங்கள் கைகுழந்தையான மகளுக்கு வெற்று பீர் கேன்களை விளையாட கொடுப்பார், சில நேரங்களில் எல்லை மீறி சென்று காலி பீர் கேன்களை குழந்தையின் வாயில் வைத்து குடி, குடி என்று கைக்குழந்தை என்றும் பாராமல் டார்ச்சர் செய்வார். மேலும் தனது மாமியாரின் தூண்டலின் பேரில் தன்னை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தினார் என்றும் புகார் மனுவில் அப்பெண் கூறி உள்ளார்.
வாரத்தில் பெரும்பாலான நாட்கள் மது அருந்தும் கணவர் போதை ஏறிவிட்டால் நிதானம் இழந்து என்னை இன்னும் அதிகமாக அடித்து, உதைத்து கொடுமை படுத்துவார். திருமணத்திற்கு கொடுத்த நகை, பணம் போதவில்லை என கூறி பெற்றோர் வீட்டிலிருந்து மேலும் வரதட்சணை வாங்கி வர சொல்லி அடிக்கடி தகராறு செய்வார். தன்னுடைய உடல் அழகு குறித்து விமர்சனம் செய்து தொடர்ந்து மனதை புண்படுத்தி வந்ததாகவும், ஒரு கட்டத்தில் தன்னுடன் உடலுறவு கொள்ள மறுத்து விட்டார் என்றும், இருவருக்குமிடையே தாம்பத்திய உறவு நடந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
Also read... ஜப்பானில் திருமணமான பெண்ணுடன் உடலுறவு வைத்துக்கொண்ட பெண்ணுக்கு ரூ.70000 அபராதம்!
என்னை அவர் படுக்கையில் சேர்த்து கொள்ளாமல் ஒதுக்கி வைத்துள்ளார் என்றும் புகாரில் கூறி உள்ளார் அந்த பெண். இடையில் குழந்தையின் உடல்நிலை மோசமான போது சிகிச்சை அளிக்க கூட காசு கொடுக்க மறுத்துவிட்டார். துபாயில் இவ்வளவு கொடுமைகளை செய்து விட்டு இந்தியா திரும்பிய பின் தன்னை தன் தாய் வீட்டில் விட்டு சென்று விட்டார். சமீபத்தில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் மீண்டும் துபாய் பறந்து விட்டார். மனம் திருந்தி என்னை வந்து அழைத்து செல்வார் என்று காத்திருந்த நிலையில், தன்னை மனம் நோக செய்து விட்டு மீண்டும் துபாய் பறந்துள்ள கணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணீர் மல்க கோரியுள்ளார் பாதிக்கப்பட்ட பெண். இதனை அடுத்து பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் தற்போது அவரின் கணவர் மீது எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர் போலீஸ் அதிகாரிகள்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.