அகமதாபாத்தில் உள்ள ஆர்ணா மருத்துவமனை மருத்துவர் ரோஹித் ஜோஷ். ஆர்ணா மருத்துவனையில் இருந்து இவருக்கு அழைப்பு வந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள ஆக்ஸிஜன் இன்னும் 5 நிமிடங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் ஆக்ஸிஜன்கள் வேண்டும் என அலர்ட் செய்துள்ளனர். இதனையடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுத்துகொண்டு காரில் விரைந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மருத்துவர் ரோஹித் ஜோஷ், “ மருத்துவமனையில் இருந்து போன் வந்ததும் எனக்கு வேறு வழி தெரியவில்லை. என்னுடைய காரை எடுத்துக்கொண்டு ஊழியர்களுடன் இரண்டு சிலிண்டர்களை எடுத்துக்கொண்டு 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனையை 5 நிமிடத்தில் சென்றடைந்தேன். நான் கட்டாயமாக டிராபிக் விதிமுறைகள் அனைத்தையும் மீறி இருப்பேன். நாங்கள் மருத்துவமனை அடைந்தபோது தான் நிம்மதியடைந்தோம்.
நான் சென்ற வேகத்துக்கு எதாவது சிறிய விபத்து நடந்திருந்தாலும் நாங்கள் கட்டாயமாக உயிரிழந்திருப்போம். காரில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்து விபத்தை ஏற்படுத்தியிருக்கும். நான் மட்டும் சரியான நேரத்துக்கு மருத்துவமனையை சென்றடையவில்லை எனில் அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த 4 நோயாளிகள் நிலையை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. தண்ணீரில் இருந்து வெளியேற்றப்பட்ட மீனை போன்று அவர்கள் துடிதுடித்து இருந்திருப்பார்கள்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறை எங்களைப்போன்று பிற மருத்துவமனைகளும் எதிர்க்கொள்கின்றன. சில இடங்களில் திட்டமிடப்பட்ட பல அறுவைசிகிச்சைகளை ரத்து செய்துள்ளனர். எங்கள் மருத்துவமனையில் இரண்டு மினி ட்ரக்குகளை வாடகைக்கு எடுத்துள்ளோம். 4 ஊழியர்களை தினமும் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துவர நியமித்துள்ளோம்” என்றார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.