2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் சாட்சியங்களை திரித்து அப்பாவிகளை சிக்க வைக்க முயற்சித்தாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஆர்பி ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட், சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா சிதால்வத் ஆகியோரை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த மூவரின் மீது இபிகோ 468, 194 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, சிறப்பு விசாரணை குழு(SIT) ஒன்றை அமைத்து வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இம்மூவரும் பிணை கேட்டு குஜராத் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி டிடி தக்கர் விசாரித்தார். இந்த விசாரணையில் மூவரும் பெரும் சதித் திட்டம் தீட்டியதற்கான முகாந்திரம் இருப்பதாகக் கூறி பிணை தரக் கூடாது என வாதத்தை வைத்தது. சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அன்றைய முதலமைச்சரான மோடி தலைமையிலான அரசை கவிழ்க்க அரசியல் ரீதியான சதியில் தீஸ்தா சிதால்வத் ஈடுபட்டுள்ளார். எதிர்க்கட்சியிடம் இருந்து இதற்காக சட்ட விரோதமாக தீஸ்தா பணம் பெற்றுள்ளார். மறைந்த காங்கிரஸ் தலைவர் அகமது படேலுடன் இணைந்து இந்த சதியில் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக ரூ.30 லட்சம் பணத்தை அகமது படேலிடம் இருந்து தீஸ்தா பெற்றுள்ளார்.
அன்று டெல்லியில் ஆட்சி புரிந்து வந்த தேசிய கட்சியின் மூத்த தலைவர்களை தீஸ்தா தொடர்ந்து சந்தித்து வந்துள்ளார். மேலும், தனக்கு ராஜ்யசபா பதவி ஏன் தரவில்லை என அக்கட்சியினரிடம் 2006ஆம் ஆண்டில் தீஸ்தா கேட்டதாகவும் சிறப்பு விசாரணை குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி பிணை மனு தொடர்பான விசாரணையை திங்கள் கிழமை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: பாஜக வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவு தந்த காங்கிரஸ் கூட்டணி கட்சி - மகாராஷ்டிரா வழியில் ஜார்கண்ட்?
மறைந்த அகமது படேல் மீதான இந்த புகாரை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. காவல்துறை அமைத்துள்ள எஸ்ஐடி குழு தனது முதலாளிகள் சொல்வதற்கு ஏற்ப செயல்பட்டு வருகின்றன. இறந்த நபரின் மீது கூறப்படும் புகார் என்பது எத்தகைய உள்நோக்கம் கொண்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த பொய்களை மறுப்பதற்கு கூட அவர் இல்லை என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. காவல்துறையின் கருத்துக்கள் அனைத்து பொய்யாக ஜோடிக்கப்பட்வை. 2002 கலவரத்திற்கான பொறுப்பை மறைக்கவே இந்த செயலில் பிரதமர் ஈடுபடுகிறார் எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.