ஹோம் /நியூஸ் /இந்தியா /

சென்னை திரும்பிய ரயிலில் பற்றி எரிந்த தீ.. பயணிகள் அதிர்ச்சி!

சென்னை திரும்பிய ரயிலில் பற்றி எரிந்த தீ.. பயணிகள் அதிர்ச்சி!

அஹமதாபாத் தீ விபத்து

அஹமதாபாத் தீ விபத்து

பயணிகள் கூறிய தகவலையடுத்து ரயிலை உடனடியாக நிறுத்தி, ரயில்வே ஊழியர்கள் தீயை அணைத்து பெரும் அசம்பாவிதங்களை தவிர்த்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Ahmadabad (Ahmedabad) [Ahmedabad], India

  அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

  அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த கொண்டிருந்த நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரயிலின் கிச்சன் போகியில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

  கிச்சன் போகியிலிருந்து புகை வருவதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து ரயிலில் இருந்த ஊழியர்களை எச்சரித்தனர்.

  ALSO READ | பயணிகள் இனி விரும்பிய உணவை ஆர்டர் செய்யலாம் - இந்திய ரயில்வேயில் புதிய சேவை அறிமுகம்

  இதனை உறுதி செய்த ஊழியர்கள் ரயிலை, கூடூர் ரயில் நிலையம் அருகே நிறுத்தினர். பின்னர் கிச்சன் போகியில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டது.

  பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. பயணிகள் தீ விபத்தை கண்டதால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Train Accident