காதலர் தினத்தை முன்னிட்டு நேபாளத்தில் இருந்து பலவிதமான ரோஜாக்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
காதலர் தினத்துக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், ரோஜா பூக்கள் விற்பனை படுஜோராக உள்ளது. இந்நிலையில், நேபாள தலைநகர் காதமண்டில் இருந்து 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரோஜாக்கள் கொல்கத்தா, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.
இந்த ஆண்டு சுமார் 200,000 ரோஜாக்கள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 1.5 லட்சம் ரோஜாக்கள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஓசூரில் இருந்து வெளிநாடுகளுக்கும் ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் 30 வகையான ரோஜா மலர்கள் விளைவிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் காதலர் தின கொண்டாட்டத்திற்கு மட்டுமே அதிகளவில் ரோஜா மலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதே போல், பல வண்ணங்களிலான பிளாஸ்டிக் ரோஜாக்களும் பூஞ்செண்டுகளும் காதலர்களை கவர்ந்துள்ளன. அதன் விற்பனையும் கலைகட்டி உள்ளது.
Also see... உ.பியில் ராகுல், பிரியாங்காவை பிரம்மாண்டமாய் வரவேற்ற காங்கிரஸ் தொண்டர்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rose, Valentines day